பாகிஸ்தான் 205 ரன்கள் வித்தியாசத்தில் கென்யாவை வீழ்த்தியது

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

ஹம்பன்டோட்டா,பெப்;23- 10வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஹம்பன்டோட்டாவில் நடந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் கென்யா (பிரிவு \'ஏ\') அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 317 ரன் குவித்தது. அதிகபட்சமாக உமர் அக்மல் 71 ரன்கள் (52 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்), மிஸ்பா உல் ஹக் 68 ரன்கள் (69 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். 318 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய கென்யா அணி 33.1 ஓவர்களில் 112 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதையடுத்து பாகிஸ்தான் அணி 205 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கென்யா அணியில் அதிகபட்சமாக ஒபுயா 58 பந்துகளில் 3 பவுண்டரி 3 சிக்சருடன் 47 ரன்கள் எடுத்தார். பந்து வீச்சில் அப்ரிடி 5 விக்கெட்களை வீழ்த்தினார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.