தென் ஆப்பிரிக்காவை தோற்கடிப்போம்; வெஸ்ட்இண்டீஸ் கேப்டன் டாரன் சமி

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

புதுடெல்லி, பிப்.24- உலக கோப்பை போட்டியில் டெல்லியில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா- வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. தென்ஆப்பிரிக்கா தர வரிசையில் 3-வது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் 9-வது இடத்திலும் உள்ளன. இந்த போட்டி குறித்து வெஸ்ட்இண்டீஸ் கேப்டன் டாரன் சமி கூறியதாவது, ??கேப்டனாக இருந்தாலும் எனது பேட்டிங், பந்து வீச்சு திறன் பாதிக்காது. முன்னாள் வீரர் கிளைவ் லாயிட், மானேஜர் ரிச்சி ரிச்சர்ட்சனிடம் இருந்து இந்திய ஆடுகளங்கள் குறித்து ஆலோசனை பெற்றோம். தென் ஆப்பிரிக்காவிடம் நாங்கள் ஏற்கனவே மோசமாக தோற்று இருந்தாலும், இன்றைய ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி தென் ஆப்பிரிக்காவை தோற்கடிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. எங்கள் அணியில் உள்ள வீரர்கள் ஐ.பி.எல்., சாம்பியன் லீக் போட்டிகளில் இங்கு ஆடி இருக்கிறார்கள். இதனால் இங்குள்ள ஆடுகளங்களில் எங்கள் அணி வீரர்கள் சிறப்பாக விளையாட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது?? என்று கூறியுள்ளார். உலக கோப்பை போட்டியில் இரு அணிகளும் 4 முறை மோதியுள்ளன. இதில் இரு அணிகளும் தலா 2 ஆட்டத்தில் வெற்றி பெற்று உள்ளன.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.