காளகஸ்தி சிவன் கோவிலில் சிவராத்திரி பிரமோற்சவ விழா; பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

நகரி, பிப். 24- இந்தியாவில் உள்ள புகழ் பெற்ற பஞ்சபூத தலங்களில் ஒன்றான வாயு தலமாக விளங்குவது காளகஸ்தி சிவன் கோவில். இங்கு நாளை மறுநாள் சிவராத்திரி பிரமோற்சவ விழா தொடங்குகிறது. இங்கு ராகு-கேது தோஷம் உள்ளவர்கள் தோஷ நிவாரண பூஜை செய்கிறார்கள். இக்கோவிலில் சிவராத்திரி பிரமோற்சவ விழா நாளை மறுநாள் 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 27-ந்தேதி பூத சுக வாகனங்களில் வாயுலிங்கேஸ்வரர், ஞான பிரசனாம்பிகா தாயாருடன் உலா வருவார். 28-ந்தேதி ராவண மயூர வாகனத்திலும் மார்ச் 1-ந்தேதி சேஷயாழி வாகனத்திலும் 2-ந்தேதி மகா சிவராத்திரியை யொட்டி நந்தி-சிம்ம வாகனத்திலும் உலா வருகிறார். 3-ந்தேதி ரத உற்வசவம் நடக்கிறது.அன்று இரவு நாரத புஷ்கரணி தெப்ப உற்சவம் நடக்கிறது. 4-ந்தேதி காலை கல்யாண உற்சவம், 5-ந்தேதி சரஸ்வதி கல்யாணம், 6-ந்தேதி கைலாசகிரி பிரதட்சணை உற்சவம் 7-ந்தேதி காலை தீர்த்தவாரியும் மாலை கொடி இறக்கமும் நடக்கிறது. 9-ந்தேதி ஏகாந்த சேவை நடக்கிறது. சிவராத்திரி பிரமோற்சவ விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை காளகஸ்தி கோவில் அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.