இலவச கலர் டி.வி. விடுபட்டவர்களுக்கு அடையாள அட்டை: மேயர் மா.சுப்பிரமணியன் தகவல்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சென்னை, பிப்.9- சென்னை மாநகராட்சி சார்பில் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கும் விழா இன்று 65வது வார்டுக்கு உட்பட்ட பயனாளிகளுக்கு விருகம்பாக்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தொலைக் காட்சிப் பெட்டிகளை வழங்கி மேயர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:- மக்கள் தொகை கணக் கெடுக்கும் பணி இன்று நாடு முழுவதும் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய பலன்கள் சரியாக கணக்கெடுக்கப்பட்டு, ஜவஹர்லால் நேரு தேசிய நகர்புர புனரமைப்பு திட்டம், பி.எஸ்.யு.பி. திட்டம் போன்றவைகளால் பயன் பெற ஏதுவாக அமையும். எனவே பொதுமக்கள் கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளும் பணியாளர்களுக்கு முழு விவரங்களை அளித்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மொத்தம் 3492 கோடியே 72 லட்சத்து 59 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு கோடியே 62 லட்சத்து 80 ஆயிரம் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்க திட்டமிடப்பட்டு, இதுவரை ஒரு கோடியே 58 லட்சத்து 82 ஆயிரத்து 186 குடும்பங்களுக்கு இலவச வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டிகள் வழங்கப்பட்டு, தொடர்ந்து வழங்கப்படுகின்றன. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 155 வட்டங்களில் இதுவரையில் 7 லட்சத்து 43 ஆயிரத்து 941 இலவச வண்ணத் தொலைக் காட்சிப்பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன. இன்று 65வது வார்டுக்கு உட்பட்ட பயனாளிகளுக்கு 11 ஆயிரத்து 228 வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டிகள் வழங்கப்படுகின்றன. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 155 வட்டங்களில் இதுவரையில் 7 லட்சத்து 43 ஆயிரத்து 941 இலவச வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன. இன்று 65வது வார்டுக்கு உட்பட்ட பயனாளிகளுக்கு 11 ஆயிரத்து 228 வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டிகள் வழங்கப்படுகின்றன. இலவச வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டிகள் விடுபட்ட பயனாளிகளுக்கு முதல்-அமைச்சர் தலைவர் கலைஞர் உத்தரவுப்படி, துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரைப்படியும் அடையாள அட்டைகள் வழங்கப்படும். அதன் பின்னர் அனைவருக்கும் இலவச வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டிகள் வழங்கப்படும். விருகம்பாக்கத்தில் சென்ற ஆண்டு பெய்த மழையின் போது 40 பைபர் போட்டுகள் பயன்படுத்தப்பட்டு, இப்பகுதி மக்கள் மீட்கப்பட்டனர். விருகம்பாக்கம் கால்வாய் பொதுப்பணித்துறை மூலம் ரூ. 63 கோடியே 19 லட்சம் செலவில் தூர் வாரப்பட்டு, ஆழப்படுத்தப்பட்டு, அகலப்படுத்தப்படுகிறது. கான்கிரீட் தளம் அமைத்து இருபுறமும் 8 அடி உயரத்திற்கு மதில் சுவர் அமைத்து அதன்மீது வேலி அமைக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் குப்பைகள் கொட்டுவது தடுக்கப்படுவதுடன், போரூரிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் இக்கால்வாய் மூலம் செல்வதற்கு ஏதுவாக இருக்கும். மேலும் 100 அடி சாலையிலிருந்து கூவம் கால்வாயுடன் இணைப்பு கால்வாய் ஏற்படுத்தப்பட்டு, உபரி நீர் வெளியேற்ற பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் இரண்டு ஆண்டு காலத்தில் முடிக்கப்படும். இதனால் விருகம் பாக்கம் கால்வாயில் வெள்ளப்பெருக்கு இல்லாத வாறு நடவடிக்கை மேற் கொள்ளப்படுகிறது. இனி வருங்காலத்தில் விருகம் பாக்கம் பகுதியில் மழை நீரினால் பாதிக்கும் அபாயம் இருக்காது. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் துணை ஆணையர் (கல்வி) பாலாஜி, மன்ற எதிர் கட்சித் தலைவர் சைதை ப.ரவி, மண்டலக் குழுத் தலைவர் தனசேகரன், மன்ற உறுப்பினர் இளங்கோவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.