இந்திய கால்பந்து அணி பயிற்சியாளர் நீக்கம்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

புதுடெல்லி:பிப்,24- ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் இந்திய அணி மோசமான தோல்வியை தழுவியதை தொடர்ந்து பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து பாப் ஹவுட்டன் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். கத்தார் தலைநகர் தோகாவில் அ‌ண்மை‌யி‌ல் நடைபெ‌ற்ற ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் இந்திய அணி தனது 3 லீக் ஆட்டங்களிலும் தோல்வியை கண்டு வெளியேறியது. இந்த மோசமான தோல்வியை தொடர்ந்து இந்திய கால்பந்து சம்மேளனத்தின் செயற்குழு கூட்டம் டெல்லியில் நடந்தது. இந்த கூட்டத்தில் இந்திய அணியின் தோல்வி குறித்து விவாதிக்கப்பட்டது. \'அதிக பணம் செலவழித்தும், அணியினருக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தும் அணியின் செயல்பாடு மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது\' என்று டெக்னிக்கல் கமிட்டி அளித்த அறிக்கை செயற்குழுவில் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும், அதன்படி பயிற்சியாளர் பாப் ஹவுட்டனை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது\'\' என்று இந்திய கால்பந்து சம்மேளன நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தை சேர்ந்த முன்னாள் வீரரான பாப் ஹவுட்டன், 2006ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றார். கடந்த ஆ‌ண்டு அவரது ஒப்பந்தம் 2013ஆம் ஆண்டு வரை புதுப்பிக்கப்பட்டது. ஒப்பந்த காலம் முடியும் முன்னரே அவர் நீக்கப்படுகிறார். ஒப்பந்த காலம் முடியும் முன்பு நீக்கப்படுவதால் சட்ட ஆலோசனையை பெற இந்திய கால்பந்து சம்மேளனம் முயற்சி மேற்கொண்டுள்ளது. ஹவுட்டன் பயிற்சியில் 2008ஆம் ஆண்டு ஆசிய கால்பந்து கூட்டமைப்பு சேலஞ்ச் கோப்பையை இந்திய அணி வென்று 27 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிய கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றது. மேலும் 2007, 2009ஆம் ஆண்டுகளில் நேரு கோப்பைக்கான சர்வதேச போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.