படைப்பாற்றல் திறனை பொறியியல் மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்: எம்ஐடி கல்லூரி முதல்வர்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சென்னையை அடுத்த பொன்மார் பிரின்ஸ் டாக்டர் கே. வாசுதேவன் பொறியியல் கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற தொழில்நுட்பக் கருத்தரங்கைத் தொடக்கி வைத்து அவர் மேலும் பேசியது: பொறியியல் படிக்கும் மாணவர்கள் பட்டம் பெறுவதில் மட்டும் கவனம் செலுத்தாமல், பயின்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி புதிய படைப்புகளையோ, ஏற்கெனவே படைக்கப்பட்ட கருவி, இயந்திரங்களின் திறனை மேம்படுத்தியோ,புதுமையான வசதிகள், திறன் கொண்ட நவீன படைப்புகளையோ உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.
கைப்பேசி வெறும் தொலைபேசியாக மட்டும் பயன்படாமல் அதில் ரேடியோ, கேமரா, டேப்ரிக்கார்டர், விடியோ, கால்குலேட்டர், கம்ப்யூட்டர், டார்ச் லைட் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு இருப்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
பறவை போல் வானில் பறக்க என்ன வழி என்று சிந்தித்ததால்தான் சைக்கிள் பழுது பார்க்கும் தொழில் செய்து கொண்டு இருந்த ரைட் சகோதரர்களால் விமானம் கண்டுபிடிக்க முடிந்தது. எனவே கற்பனையையும், தொழில்நுட்பத்தையும் செயல்திறனுடன் ஒருங்கிணைத்தால் படைப்புகளை உருவாக்க முடியும் என்றார் அவர்.
அண்ணா பல்கலைக்கழக திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை இயக்குனர் ஜெ.குமார் பேசியதாவது: வரும் அக்டோபர் 13-ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற இருக்கும் சர்வதேச அறிவியல் திருவிழாவில் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்கும் படைப்பாற்றல் போட்டியில் மாணவர்கள் பங்கேற்று தங்களது திறனை வெளிப்படுத்த முன்வர வேண்டும் என்றார்.
அண்ணா பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் கே.எம்.பரமசிவம், பி.வரலட்சுமி, வி.கோமதி, ஜி.கவிதா, பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி தலைவர் கே. வாசுதேவன், துணைத் தலைவர் வி. விஷ்ணுகார்த்திக், முதல்வர் சுந்தர்செல்வின், நிர்வாக அதிகாரி பார்த்தசாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.