கிளிமஞ்சாரோ மலை ஏறி சாதனை நிகழ்த்திய மாணவிக்குப் பாராட்டு

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

ஆப்பிரிக்காவின் மிக உயர்ந்த மலைச் சிகரமான கிளிமஞ்சாரோ மலையில் ஏறி சாதனை நிகழ்த்திய 7 ஆவது வகுப்பு மாணவி டி.சாருமதிக்கு சென்னையில் சனிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
சென்னை தாம்பரத்தை அடுத்த மண்ணிவாக்கம் நடேசன் பள்ளியில் 7 வது வகுப்பு படித்து வரும் 11 வயது மாணவி சாருமதி. இவர் கடந்த 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று ஆப்பிரிக்க கண்டம் தான்சானியாவில் உள்ள கிளிமஞ்சாரோ மலையில், 19 ஆயிரத்து 308 உயரத்தில் உள்ள கில்மென் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார்.
உலகில் மிகக் குறைந்த வயதில் கிளிமஞ்சாரோ மலை ஏறி சாதனை நிகழ்த்தி இருக்கும் மூன்றாவது நபர் என்ற சிறப்பையும், முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்று இருக்கிறார் மாணவி டி.சாருமதி.
அவருக்கு சனிக்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவில், பள்ளி தாளாளர் என்.ராமசுப்ரமணியன் பேசியதாவது:
மலை ஏறும் பயிற்சியாளரான மாணவி சாருமதியின் தந்தை திருலோகசந்திரன், பள்ளி மாணவர்களுக்கு முதுமலை,ஏலகிரி,ஏற்காடு மலைகளில் பயிற்சி அளித்து வருவதன் மூலம் நன்கு அறிமுகமானவர். தந்தையிடம் சிறுவயது முதல் மலை ஏறும் பயிற்சி பெற்ற மகள் சாருமதியை ஆப்பிரிக்காவில் உள்ள கிளிமஞ்சாரோ மலைச் சிகரத்தில் ஏறி சாதனை படைக்க அழைத்துச் செல்லப்போவதாக கடந்த மாதம் கூறினார். என்னால் முதலில் நம்ப முடியவில்லை. அவர் தனது முடிவில் உறுதியாக இருப்பதை அறிந்து வாழ்த்து தெரிவித்த நான், அவருக்கு பள்ளி சார்பில் ரூ. 85 ஆயிரம் வழங்கி உதவினேன். பள்ளிக்குப் பெருமை சேர்த்து இருக்கும் மாணவி டி.சாருமதியின் சாதனை பாராட்டுக்குரியது என்றார் அவர். "உலகில் மிக உயரமான எவரெஸ்டு மலை சிகரத்தில் ஏறி சாதனை படைப்பது தான் எனது லட்சியம்' என்றார் மாணவி டி.சாருமதி. விழாவில் பள்ளி முதல்வர் காயத்ரி ராமச்சந்திரன், கல்வி ஆலோசகர் சுவாமிநாதன், சாருமதியின் தந்தை திருலோகசந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.