கேனான் இந்தியா நிறுவனம் இஓஎஸ் சி700 கேமிராவை வெளியிட்டது

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சென்னை, செப்டம்பர் 24, 2017: கேனான் நிறுவனமானது எல்.வி.பிரசாத் பிலிம் மற்றும் டிவி அகாதெமி, எஸ்ஐசிஏ மற்றும் கோடெக்ஸ் ஆகியவற்றுடன் இணைந்து சினிமா இஓஎஸ் சி700 டிஜிட்டல் தொழில்நுட்பக் கேமிரா தொடர்பாக சிறப்பான காட்சிப் பதிவை வெளியிட்டது.
இந்த பிரத்யேக படக்காட்சி நிகழ்வானது செப்டம்பர் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. அதில், தமிழ் திரைப்படத் துறையைச் சேர்ந்த ஒளிப்பதிவாளர்கள் அதிகளவில் பங்கேற்றனர். குறிப்பாக முன்னணி ஒளிப்பதிவாளர்களாக விளங்கக் கூடிய பி.சி.ஸ்ரீராம், ராஜீவ் மேனன், ரவி கே.சந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து, கேனான் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் திரு கசுடடா கோபாயாஷி கூறியதாவது:-
தொழில்நுட்பத்தில் பல புதுமைகளைக் கண்டறிந்து அதனை வெளியிட வேண்டும் என்பதில் கேனான் உறுதிப்பாட்டுடன் உள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவில் மிகச்சிறப்பான இடத்தைப் பிடித்து நிழற்படம் சார்ந்த துறையில் முன்னிலை பெற்று விளங்குகிறது. சினிமா என்பது இந்திய கலாசராத்தின் ஒரு அங்கமாகவே விளங்குவதை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. எனவே, சினிமா துறையிலும் நாங்கள் கால் பதித்துள்ளோம். திரையில் நிபுணத்துவத்தை காண்பிக்க எங்களுக்கு ஒரு வாய்ப்பை இது ஏற்படுத்தித் தருவதுடன், எங்களது வாடிக்கையாளர்களுக்கும் சிறந்த அனுபவத்தையும் மகிழ்ச்சியையும் தருகிறது.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.