கிண்டி சிறுவர் பூங்கா வன உயிரின வார துவக்க விழா

| [ திரும்பி செல்ல ]

02.10.2017 அன்று சிறுவர் பூங்காவில் வன உயிரின வார துவக்க விழா நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோர் 2ம் தேதி முதல் 8ம்தேதி வரை வன உயிரின வார விழா நாடெங்கும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் தொடரச்சியாக சென்னை மாவட்டத்திலுள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியருக்கு ஒவியப் போட்டி,பேச்சுப் போட்டி மற்றும் வினாடி - வினா போட்டிகள் கிண்டி சிறுவர் பூங்காவில் நடத்தப்பட்டு, போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ மாணவியர் தேர்வு செய்யப்பட்டனர். இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட வனத்துறை அமைச்சர் திரு.திண்டுக்கல் சீனிவாசன் அவர்கள், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கி விழா பேருரையாற்றினார்கள். மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் வா. மைத்ரேயன். எம்.பி.அவரகள், நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெ.ஜெயவர்தன்,எம்.பி அவர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.என்.ரவி, எம்.எல்.ஏ.ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
ஓவியப் போட்டியில் பரிசு பெற்ற ஓவியங்கள் மற்றும் வன உயிரினம் தொடர்பான புகைப்படங்களின் கண்காட்சியும்,பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியரின் உரையும், கலை நிகழ்ச்சிகளும் விழாவின் சிறப்பு அம்சமாக இடம்பெற்றன.


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.