Tamilnadu Forest Department Workshop @ Kolapakkam

| [ திரும்பி செல்ல ]

மருத்துவ தாவரங்கள் சாகுபடி, மதிப்புக் கூட்டல் மற்றும் வர்த்தகம் தொடர்பான தற்போதைய நிலை மற்றும் எதிர்காலம் குறித்த தேசிய பயிலரங்கத்தை 03.10.2017 அன்று மாநில வன ஆராய்ச்சி நிலையம், கொளப்பாக்கம், சென்னை -127-ல் வனத்துறை அமைச்சர் திரு.திண்டுக்கல் சி.சீனிவாசன் அவர்கள் துவக்கி வைத்தார். முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (ஆராய்ச்சி மற்றும் கல்வி) திரு.R.K. உபாத்யாய், வரவேற்புரை வழங்கினார். சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலாளர் திரு.முகமது நசிமுதின், அவர்கள் தலைமையுரையாற்றினார். முதன்மை தலைமை வனப்பாதுகாவலார்(வனத்துறை தலைவர்) ஹி.பசவராஜீ., முன்னிலையுரையாற்றினார். ஊரக தொழில் துறை அமைச்சர் திரு. பா. பெஞ்சமின், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருமதி. மரகதம் குமாரவேல் மற்றும் திரு. K.N ராமச்சந்திரன் ஆகியோர் சிறப்புரை நல்கினர். நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் திரு.சிட்லபாக்கம் ச. ராஜேந்திரன், திரு.திருக்கழுக்குன்றம் S. ஆறுமுகம் மற்றும் திரு.S. கெளஸ் பாஷா ஆகியோர் விழாவில் வாழ்த்துரை வழங்கினார். மருத்துவத் தாவரங்கள் குறித்த வல்லுனர்கள், வனத்துறை அலுவலர்கள், இதர துறை அலுவலர்கள், மருத்துவத்தாவரங்கள் சாகுபடி செய்யும் விவசாய பெருமக்கள் ஆகியோர் பெருமளவில் விழாவில் கலந்து கொண்டனர். விழாவின் இறுதியில் மருத்துவத்தாவரங்கள் சாகுபடியாளர், வர்த்தக மற்றும் மருந்து பொருட்கள் உற்பத்தியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்ட உற்பத்தி, விற்பனை குறித்த கலந்துரையாடல் நடைபெற்று அதில் சிறப்பான கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்றன. மாநில வன ஆராய்ச்சி நிலையம் ஏற்பாடு செய்த இத்தகைய முன்மாதிரியான பயிலரங்கம் மருத்துவத்தாவரங்கள் சாகுபடி மற்றும் வர்த்தகத்திற்கு நுழைவுவாயிலாக அமையும் என்பது உறுதி. விழாவின் நிறைவாக தலைமை வனப்பாதுகாவலர் (ஆராய்ச்சி) செல்வி. மித்தா பானர்ஜி, நன்றியுரையாற்றினார்.






முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.