Let's defeat Diabetics Organised by Dr.Mohan Diabetics

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சென்னை, 2017, நவம்பர் 11 :நீரிழிவை தோற்கடிப்பதற்கான ஆற்றல் நமது கைகளில் தான் இருக்கிறது. இந்த செய்தியுடன் நீரிழிவியலில் இந்தியாவின் முன்னணி நிபுணரான டாக்டர். மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மையம்(னுஆனுளுஊ)இ நீரிழிவு குறித்து மக்களுக்கு எடுத்து கூறி கற்பிப்பதை இலக்காகக் கொண்டு~நீரிழிவை நாம் தோற்கடிப்போம்| என்ற பெயரிலான ஒரு பொது செயல்முயற்சியை தொடங்கியிருக்கிறது. இந்த சிறப்பான குறிக்கோளுக்கு தங்களது மனமார்ந்த ஆதரவை வழங்கிய நடிகர்கள் திரு. ளு.ஏநு. சேகர்,ஆள. ரேவதி,ஆள. கவுதமி ஆற்காடு இளவரசர் திரு. நவாப் முகமது அப்துல் அலி, பாடலாசிரியர் திரு. வைரமுத்து, பின்னணிப்பாடகி திருமதி. சுஜாதா மோகன் மற்றும் ஸ்குவாஷ் சேம்பியன் திருமதி. தீபிகா பள்ளிக்கல், டாக்டர். ஏ. மோகன், டாக்டர். இரஞ்சித் உன்னிகிருஷ்ணன் மற்றும் டாக்டர். சு.ஆ. அஞ்ஜனா ஆகியோரைக் கொண்ட னுஆனுளுஊ-ன் குழுவினரோடு இணைந்து இதற்காக உருவாக்கப்பட்டுள்ள இணையத்தளத்தை அறிமுகம் செய்தனர். அத்துடன் நீரிழிவை தோற்கடிப்பதற்கான உறுதிமொழியை ஏற்றனர். இந்த அறிமுக நிகழ்வின் ஒரு பகுதியாக நீரிழிவு நிலையுடனான தங்களது யுத்தத்தில் வெற்றிகரமாக ஜெயித்து இந்த கோளாறோடு 55 ஆண்டுகளுக்கும் அதிகமாக வாழ்ந்திருக்கும் 3 நீண்டகால நோயாளிகள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி மையத்தினால் இந்த ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு சமீபத்திய ஆய்வு முடிவுகளில், இந்தியாவில் நீரிழிவு நிலையோடு வாழ்கின்ற நபர்களில் 50 சதவீதத்தினர் அவர்களது நோய்நிலை குறித்து அறியாமலேயே வாழ்ந்து வருகின்றனர் என்பது வெளிப்படுத்தப்பட்டது. நீரிழிவினால் தங்களுக்கு ஏற்படும் ஆபத்தை புரிந்துகொள்ளவும் மற்றும் தங்களுக்கு மட்டுமின்றி தங்களைச் சுற்றியுள்ள பிறருக்காகவும் நீரிழிவை தோற்கடிப்பதற்கான யுத்தத்தில் இணையவும் மக்களை ஊக்குவிப்பதை 'நீரிழிவை நாம் தோற்கடிப்போம்" என்ற பிரச்சார இயக்கம் குறிக்கோளாக கொண்டிருக்கிறது. இப்பிரச்சார இயக்கத்தின் ஒரு அங்கமாக இடம்பெற, இதற்கான உறுதிமொழியை எடுப்பதற்கு றறற.டநவளனநகநயவனயைடிநவநள.உழஅ-ல் லாகின் செய்யவும். இன்ட்ராக்ட்டிவ் செயல்திறன் கொண்ட இந்த வலைதளம், நீரிழிவை மேலாண்மை செய்ய தங்களது தினசரி வாழ்க்கையில் இணைக்கப்பட வேண்டிய மாற்றங்கள் மீதான தகவலை கேட்டு பெறவும் இந்த நோய் நிலை குறித்து இன்னும் சிறப்பாக அறிந்துகொள்ளவும், இது தொடர்பாக நிபுணர்களின் காணொளி காட்சிகளையும், இன்ட்ராக்ட்டிவ் உள்ளடக்கங்களையும் பதிவிறக்கம் செய்யவும் உதவுகிறது. இதை தொடர்ந்து,நிபுணர்களுடன் நேரடி கலந்துரையாடல்கள், வாக்கத்தான்கள், உணவு நெறிமுறைகள் மற்றும் உடற்பயிற்சி அமர்வுகள் ஆகியவை நிகழும். இந்த முனைப்புத்திட்டமானது, ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ஆம் நாளன்று அனுசரிக்கப்படுகிற உலக நீரிழிவு தினத்தையொட்டி நடத்தப்படுகிறது. வரும் ஆண்டில் இதுகுறித்த விழிப்புணர்வை பரப்ப படிப்படியாக செயலப்படுத்தப்படும் வகையில் இந்தியாவில் 10 நகரங்களை ~நீரிழிவை நாம் தோற்கடிப்போம்| என்ற இந்த பிரச்சார இயக்கம் இலக்காகக் கொண்டிருக்கிறது. இந்த அறிமுகம் குறித்து பேசிய டாக்டர் மோகன்|ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மையத்தின் தலைவரும் முதன்மை நீரிழிவு சிகிச்சை நிபுணருமான டாக்டர். ஏ. மோகன்,'~நீரிழிவு நோயை தோற்கடிப்போம்| என்ற இந்த பரப்புரை இயக்கத்தை இந்திய குடிமக்களுக்கு நான் அர்ப்பணிக்கிறேன். நம் நாட்டில் நீரிழிவு நோயானது, உயிரிழப்புக்கான முதன்மையான காரணங்களுள் 7வதாக இருக்கின்றபோதிலும் மிக சாதாரணமாக எடுத்துக்கொள்ளப்படுவதால் இப்பரப்புரை திட்டத்தின் வழியாகஅதுகுறித்த விழிப்புணர்வை பரப்பநாங்கள் விரும்புகிறோம். நீரிழிவுக்கு முந்தைய நிலையிலிருந்து நீரிழிவு நோயாக உருவாகக்கூடிய வளர்ச்சியை வெற்றிகரமாக தடுத்து நிறுத்த முடியும். ஆனால், அதற்கு அந்த நபரானவர் ஒரு எளிய டீடுருநு ஃபார்முலாவை மனமுவந்து தவறாது பின்பற்ற வேண்டும். எ.கா. இரத்த பரிசோதனை, வாழ்க்கைமுறை மாற்றங்கள், உங்கள் உணவு குறித்த சரியான புரிதல் மற்றும் உடற்பயிற்சி (டீடழழன ஊhநஉமளஇ டுகைநளவலடந உhயபெநளஇ ருனெநசளவயனெiபெ லழரச கழழன யனெ நுஒநசஉளைந) முறையான சிகிச்சை திட்டம் மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்களின் வழியாக நீரிழிவு நோயாளிகள் நோய் பாதிப்பில்லாமல் நீண்டகாலம் வாழமுடியும். இன்றைக்கு உங்களோடு நாங்கள் பகிர்ந்துகொண்டிருக்கிற, நீண்டகாலமாக நீரிழிவு நிலையோடு வாழ்ந்து வருபவர்களின் வாழ்க்கை பயணமானது, நீரிழிவை தோற்கடிக்கமுடியும் என்ற எங்களது நம்பிக்கைக்கு உயிருள்ள சாட்சியமாக இருக்கிறது," என்று குறிப்பிட்டார்.






முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.