எல்.ஐ.சி.-இன் 'கேன்சர் கவர்' புதிய திட்டம் அறிமுகம்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

எல்.ஐ.சி.-இன் 'கேன்சர் கவர்' என்ற புதிய உடல்நலக் காப்பீட்டுத் திட்டம் சென்னையில் செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது. பங்குச்சந்தையுடன் இணைக்கப்படாத இந்தத் திட்டத்தில் காப்பீட்டுதாரர் பாலிசி காலத்தில், தொடக்க நிலை அல்லது முதிர்ந்த நிலை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது அறிய வந்தால் பாலிசி விதி மற்றும் வரைமுறைகளுக்கு உட்பட்டு ஒரு குறிப்பிட்ட தொகை வழங்கப்படும். தொடக்க நிலை புற்றுநோயாக இருந்தால் 25 சதவீத காப்பீட்டுத் தொகை வழங்கப்படும். மேலும், 3 ஆண்டுகளுக்கான பிரீமியமும் தள்ளுபடி செய்யப்படும். முதிர்ந்த நிலை புற்றுநோயாக இருந்தால் 100 சதவீதம் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும். மேலும், முதிர்ந்த நிலையில் ஒரு சதவீத காப்பீட்டுத் தொகை 10 ஆண்டுகளுக்கு (காப்பீட்டுதாரர் உயிருடன் இருந்தாலும், இறந்துவிட்டாலும்) மாதந்தோறும் வழங்கப்படும். தவிர, செலுத்த வேண்டிய பிரீமியம் தொகையும் தள்ளுபடி செய்யப்படும். 20 முதல் 65 வயதுக்குட்பட்டவர்கள் இந்தப் பாலிசியை எடுக்க முடியும். காப்பீட்டுத் தொகை ரூ.10 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை உள்ளன. ஆன்லைன் மூலமும் இந்தப் பாலிசியை எடுத்துப் பலன் அடைய முடியும் என்று எல்.ஐ.சி.-இன் மண்டல மேலாளர் தாமோதரன் தெரிவித்தார்.


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.