SLN Coffee Ltd Launches Levista Instant Coffee

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சென்னை(இந்தியா) ,4 டிசம்பர் 2017: காபி தயாரிப்பிலும், ஏற்றுமதியிலும் நாட்டின் முதன்மை நிறுவனமான SLN Coffee PVT LTd, Levista Coffee- ஐ அறிமுகம் செய்வதன் மூலம் சில்லறை உடனடி காபி சந்தையில் நுழைகிறது, SLN நிறுவனத்தின் முதல் தலைமை அடையாளமாக (brand) வெளிவரும் Levista சிறந்த முறையில் தனித்தன்மையுடன், பேரார்வத்துடன் SLN நிறுவனத்தின் சொந்த தோட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட காபிக் கொட்டைகளிலிருந்து தயாராகிறது. 'காபி பிரியர்களுக்கான காபி' என்ற நோக்குடன் வெளிவரும் Levista முதலில் தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் கிடைக்கும்.
Levista உடனடி காபி . இம்மூன்று கலவைகளில் வெளிவரவிருக்கிறது, Classic(100% தூய காபி), premium (80% காபி + 20% சிக்கரி கலவை) மற்றும் Strong (60% காபி +40% சிக்கரி) இம்மூன்று வகைகளையும் காபிப்பிரியர்களின் மாறிவரும் சுவை விருப்பங்களை மனதில் கொண்டு, நீண்ட ஆழமான ஆராய்ச்சியின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இந்த மூன்று வகைகளுன் செளகரியமான வகையில் காபிப் பிரியர்கள் பருகிட, கண்ணாடி கூடு, கேன் (can), சாசே (sachet), என மொத்தம் 27 வகை கொள்கலன்களில் (packages) வெவ்வேறு அளவைகளில் கிடைக்கும் (27 stock keeping units)
Levista உடனடி காபி தயாரிப்புகளை அறிமுகம் செய்து வைத்து SLN Coffee Pvt Ltd , நிறுவனத்தின் தலைமை இயக்குனர் நா.சாத்தப்பன், காபி பிரியர்களுக்காகவே பிரத்தியேகமான தயாரிக்கப்பட்ட Levista காபியை உருவாக்க காபித் தொழிலில் நாங்கள் பெற்றுள்ள 60 வருட அனுபவம் உறுதுணையாக அமைந்தது இந்த 60 வருடங்களில் 10 வருடங்களுக்கும் மேல் நாங்கள் உடனடி காபி வகைகளி உள்நாட்டு , பன்னாட்டு சந்தைகளுக்கு தயாரித்து விநியோகம் செய்து பெரும் வெற்றியையும், நற்பெயரையும் ஈட்டியுள்ளோம், இந்த அளப்பரிய அனுபவம் எங்களுக்கு Levista-வை உருவாக்க மிகவும் உதவியது.
இனிவரும் காலத்தில் - Levista காபியை இந்தியா முழுக்கவும் எடுத்துச் செல்லவுள்ளோம் அடுத்த வருடம் முதல் Levista காபி, அண்மை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் திட்டமும் உண்டு.






முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.