Vasanthakumar MLA Press Meet 09/12/2017

| [ திரும்பி செல்ல ]

கடந்த நவம்பர் 30-ம் தேதியன்று ஓகி என்னும் பெயரில் இயற்கை சீற்றம் கன்னியாகுமரி மாவட்ட மக்களை வதம் செய்துள்ளது. குமரி மாவட்டத்தில் இதுவரை இல்லாத கண்டிராத அளவிற்கு பேரழிவை சந்தித்துள்ளது.
இப்பேரிடர் நடைபெற்று இன்றொடு 12 நாட்கள் ஆகிவிட்ட நிலையிலும் மக்களுக்கு மிக அத்தியவசிய தேவையான மின்சாரம் முழுமையாக கிடைக்கவில்லை. பால், மற்றும் மருத்துவ வசதிகள் முழுமையாக கிடைக்கவில்லை.
மீவை மக்கள் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் எத்தனை? மரணம்டைந்த மீனவர்கள் எத்தனை பேர், சேதமடைந்த படகுகள், விசைப்படகுகள் எத்தனை என்பது இதுவரை மத்திய மாநில அரசுகளே அறியாத் சூழல் ஏற்பட்டுள்ளது.
வெள்ளச்சேதத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்புகள் எத்தனை என்பதும் இன்னும் ஆட்சியாளர்களுக்கு தெரியாது. பாதிக்கப்பட்ட விவசாய விளை நிலஙகள் இன்னும் கணக்கெடுக்கப்பட்டாத நிலையில் உள்ளது.
பல்லாயிரக்கணக்கான தோட்ட தொழிலாளர்கள். தன்னுடைய வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறாகள். பல நூறு குடும்பஙகளில் குடும்ப உறுப்பினர்களை காணாமல் தேடி வருகிறாகள். இதுபோன்ற பேரிடர் தமிழகத்தில் எங்கும் ஏற்பட்டதில்லை.
குமரி மாவட்ட மக்களின் துயரை துடைப்பதற்கு அரசாங்கம் போர்க்கால நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக சொன்னாலும் அம்மாவட்ட மக்களின் துயர் இன்னும் 80 விழுக்காடுகள் தீர்க்காப்படாமலே உள்ளன.
எனவே கன்னியாகுமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் மாவட்டம் என் அறிவித்தாலின்றி அம்மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பவது கடினம்.
ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெல், வாழை, தென்னை, தேக்கு, ரப்பர் பலா என மக்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான அனைத்து விவசாயங்களும் சீரழிந்து விட்டன.
குமரி மாவட்டத்தின் மிகப்பெரும் தொழிலான மீன்பிடி தொழில் முற்றிலுமாக நசுங்கி விட்டது. ஆயிரக்கணக்கான மீனவர்கள் காணாமல் போனதாக மீனவ மக்கள் போராடி வருகிறார்கள். உயிரிழந்த மீனவர்களின் எண்ணிக்கை 100-க்கும் மேற்பட்டதாக் இருக்கும் என மக்கள் அஞ்சுகிறாரகள்.






முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.