வணிகர்கள், மின்னணு பொருளாதாரம் மற்றும் வாடிக்கையாளர்களை பாதிக்கும் ஆர்பிஐ யின் திருத்தப்பட்ட வணிகர் தள்ளுபடி விகிதங்கள் - எம்டிஆர் (MDR)

| [ திரும்பி செல்ல ]

இந்திய ரிசர்வ் வங்கியின் டிசம்பர் 6, 2017 அறிவிப்பின்படி பெரும் சில்லறை வணிக கடைகளில் நடைபெறும் டெபிட் கார்ட் பரிவர்தனைகளுக்கான வணிகர் தள்ளுபடி விகிதத்தை (எம்டிஆர்) 0.5% (ஒவ்வொரு பரிவர்த்தனை) லிருந்து 0.9% (ரூ. 1000 மிகாமல்) என திருத்தம் செய்துள்ளது. ​
ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஒழுங்குமுறை விதிகளை மேம்படுத்துவது தொடர்பான அறிக்கையில், சமீப காலங்களில் பாய்ண்ட் ஆப் சேல்ஸ் இயந்திர ங்கள் மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளன. இதனால் டெபிட் கார்டுகளுக் கான மெர்சண்ட் டிஸ்கவுண்ட் ரேட் ( MDR) கட்டணங்களை முறைப்படுத்துவது முக்கியமா னது என்று குறிப்பிட்டுள்ளது.​
​தற்போதுள்ள சில்லறை வணிகத்தில், குறிப்பாக சிறப்பு அங்காடிகளிலும் உயர் அங்காடிகளில் வெறும் 2% - 3% ஆதாயமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இது போன்ற எம்டிஆர் ஏற்றத்தால், விலைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் வாடிக்கையாளர்களுக்கு பெரும் சுமையாக அமையும்.
தற்போதைய மின்னணு பொருளாதாரத்தில், குறிப்பாக, யூபிஐ பரிவர்த்தனைகள் இலவசமாகவும், ஐஎம்பிஎஸ், நெப்ட் மற்றும் ஆர்டிஜி பரிவர்த்தனை கட்டணங்களை கருத்தில் கொண்டால், டெபிட் கார்ட் பரிவர்த்தனைகளை இந்த அளவு கட்டணங்கள் விதிப்பது சரியான மதிப்பீடாக அமையவில்லை. ஆர்ஏஐ தலைமை நிர்வாக அதிகாரி, குமார் ராஜகோபாலன் கூறுகையில், "டெபிட் கார்டு பரிவர்த்தனைகள், வங்கி கணக்கிலிருந்து நேரடியாக பணத்தை செலுத்துவதால், இதில் வழங்கு வாங்கியாளருக்கு வரவு இடர் எனும் கிரெடிட் ரிஸ்க் ஏதும் இல்லை. எனவே, இது போன்ற எம்டிஆர் விகிதங்களை உயர்த்துவது நியாயம் இல்லை. ​மேலும், எம்டிஆர் க்கு அதிகபட்ச அளவாக ரூ. 1000 என ஆர்பிஐ நிர்ணயித்துள்ளது, அதாவது பரிவர்த்தனை அளவு என்பது கிட்டத்தட்ட ரூ. 1.1 லட்சம் ஆகும். இது யதார்த்தமாக தோன்ற வில்லை." ​
பிற நாடுகளில் உள்ள எம்டிஆர் விகிதங்களை பார்க்கும் போது, சீனாவில் இன்னமும் 0.2% ஆகவே உள்ளது. இது நடவடிக்கைகள் வங்கிகள் மற்றும் விசா - மாஸ்டர் போன்ற கார்டு நிறுவனங்களுக்கு சாதகமாகவே அமையும். மேலும் மின்னணு பொருளாதாரம், வணிகர்களின் நலன்களை பாதிப்படைய செய்வது மட்டும்மல்லாது அது முடிவில் நுகர்வோருக்கே பெரும் சுமையை ஏற்படுத்தும்.​ வணிகர்கள் மற்றும் நுகர்வோர்களிடையே டெபிட் கார்டு பயன்பாட்டினை ஊக்கப்படுத்த ஆர்பிஐ விரும்பினால், எம்டிஆர் கட்டணங்கள் ரூ. 40 க்கு மிகாமல் இருக்கவேண்டும்.​




வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.