Vibrant Tamilnadu Food Expo 12-15 August @ Madurai

| [ திரும்பி செல்ல ]

சென்னை:சாமானியர்களும் தங்களின் உற்பத்தியை ஏற்றுமதி செய்ய வழிவகுக்கும் 'வைப்ரண்ட் தமிழ்நாடு' எனும் பெயரிலான, உணவு பொருட்களின் தொழில் வர்த்தக பொருட்காட்சி மதுரையில் நடக்க உள்ளது.
தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம், 94 ஆண்டுகளுக்கு முன், மதுரையில் துவக்கப்பட்டது. இதன் சார்பில் 'வைப்ரண்ட் தமிழ்நாடு' எனும் பெயரில், அனைத்துலக உணவுப் பொருட்களின் தொழில் வர்த்தக பொருட்காட்சியை மதுரையில் முதன் முறையாக நடத்த உள்ளது.இதன் அறிமுக விழா, சென்னையில் நேற்று நடந்தது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா பொருட்காட்சிக்கான 'லோகோ' வை அறிமுகப்படுத்தினார்.
ஏற்றுமதிவர்த்தக பொருட்காட்சி குறித்து 'வைப்ரண்ட் தமிழ்நாடு' பொருட்காட்சியின் தலைவர் திருப்பதி ராஜன், 'கிரியேட்டிவ்' தலைவர் ரத்தினவேல் ஆகியோர் கூறியதாவது:தமிழகத்தில், 20 லட்சம் கோடிக்கு பொருட்களை உற்பத்தி செய்தாலும், ஒரு லட்சம் கோடிக்கு மட்டுமே ஏற்றுமதிசெய்கிறோம்.
கடந்த, 2008ம் ஆண்டு நமது பிரதமர் மோடி,குஜராத் முதல்வராக இருந்தபோது, 'வைப்ரண்ட் குஜராத்' எனும் வர்த்தக கண்காட்சி திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதன் மூலம், அம்மாநிலம் ஏற்றுமதி வர்த்தகத்தில் மிகப்பெரிய நிலையை எட்டியது.அதன் அடிப்படையிலேயே 'வைப்ரண்ட் தமிழ்நாடு' எனும் வர்த்தக பொருட்காட்சியை, முதன் முறையாக தமிழகத்தில் அறிமுகப்படுத்துகிறோம்.
தமிழகத்தில் விளையும், தயாரிக்கப்படும் பொருட்களை பிற மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய, ஏற்படுத்தி கொடுக்கும் வாய்ப்பாக இந்த வர்த்த பொருட்காட்சி அமையும்.இதற்காக, 20க்கும் மேற்பட்ட வெளிநாடுகளில் 'ரோட்ஷோ' நடத்தி, இறக்குமதியாளர்களை கவர்ந்து வருகிறோம். தேசிய அளவிலும் தலைநகர்களில் 'ரோட்ஷோ' நடத்தஉள்ளோம்.
திட்டம்
சிறு உற்பத்தியாளர்கள் தங்களின் பொருட்களை காட்சிப்படுத்தி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய, இந்த பொருட்காட்சி வழிவகுக்கும்.முதல் வர்த்தக பொருட்காட்சி உணவு சார்ந்தது. ஒவ்வொரு ஆறு மாதமும், இந்த கண்காட்சி நடத்த திட்டமிட்டுள்ளோம். அதில், ஒவ்வொரு துறை சார்ந்தும் பொருட்காட்சி நடத்தப்படும். இந்த உணவு வர்த்தக பொருட்காட்சி மதுரை, சிக்கந்தர் சாவடி, கிரென்ஸ் யார்டில் ஆகஸ்ட், 15ம் தேதி முதல், 18ம் தேதி வரை நடக்கிறது.இது குறித்த மேலும், தகவல்களுக்கு 093452 28184, 098421 50963, 98656 66594 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.






முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.