சிறந்த திட்டமிடல் இருந்தால் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற முடியும்: வருமான வரித் துறை ஆணையர்

| [ திரும்பி செல்ல ]

சிறந்த திட்டமிடல் இருந்தால் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற முடியும் என வருமான வரித்துறை ஆணையர் அருண் சி.பரத் கூறினார். தினமணி இளைஞர்மணியில் வெளிவந்த "நாளை நான் ஐஏஎஸ்' என்ற தொடரை சென்னை அண்ணாநகர் திருமங்கலத்தில் உள்ள ஃபோக்கஸ் அகாதெமியின் இயக்குநர் மு.சிபிகுமரன் நூலாகத் தொகுத்துள்ளார். சென்னையில் இந்நூலை ஞாயிற்றுக்கிழமை ல் வெளியிட்டு அருண் சி.பரத் பேசியது: குடிமைப் பணித் தேர்வு எழுதுபவர்களுக்கு "நாளை நான் ஐஏஎஸ்' என்ற நூல் சிறந்த வழிகாட்டி. இதைப் படித்துவிட்டு, "நான் இந்தப் புத்தகத்தால் பலன் அடைந்தேன்' என்று கூறுவதே ஓர் எழுத்தாளருக்குக் கிடைக்கும் வெகுமதி. எது பலம்?: பெற்றோர் பின்னணி, பொருளாதார வசதிக் குறைவு, படிப்பதற்கான நல்ல சூழல் அமையவில்லை, பிரபலமான பள்ளி, கல்லூரிகளில் படிக்கவில்லை எனப் பல விஷயங்களை இளைஞர்கள் தங்களது பலவீனமாக நினைக்கலாம். ஆனால் அதுதான் அவர்களது பலம் என்பதை உணர வேண்டும். தன்னிடம் எதுவுமே இல்லை என நினைக்கக் கூடியவர்களுக்கே ஐஏஎஸ் ஆகும் உத்வேகமும், போராடக் கூடிய துணிவும் இருக்கும். அனைத்து வசதியும் இருக்கக் கூடிய நகர்ப்புற மாணவர்களுக்கு அத்தகைய உத்வேகம் இருக்காது. எனவே, எந்தப் பின்புலமும் இல்லை என்பதை ஒரு குறையாக நினைக்கக் கூடாது. அறிவுத்திறனுடன் கூடிய உழைப்பு, நினைவாற்றல், பொது அறிவு, நிதானமாக சிந்தித்து முடிவெடுக்கும் ஆற்றல் ஆகியவை சிறப்பாக இருந்தால் எத்தகைய போட்டித் தேர்வுகளையும் எதிர்கொள்ள முடியும். கடும் தவம்: ஐஏஎஸ் தேர்வுக்குத் தயாராகும் காலம் என்பது கடும் தவம் செய்வதற்கு ஒப்பாகும். சராசரி இளைஞர்களின் வாழ்வில் இருக்கக் கூடிய பொழுதுபோக்கு அம்சங்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வர்களுக்குப் பொருந்தாது. ஐஏஎஸ் பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்தல், நேர மேலாண்மை, விடைகளைப் பதிவு செய்யும் முறை போன்றவற்றில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தனித்துவமான முயற்சிகள், சிறந்த திட்டமிடல் இருந்தால் தேர்வில் வெற்றி பெற முடியும் என்றார் அவர். சென்னை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன், ஃபோக்கஸ் அகாதெமி இயக்குநர் மு.சிபிகுமரன், ஓய்வு பெற்ற ஐஆர்எஸ் அதிகாரி சங்கரவடிவேலு மற்றும் நிகழாண்டு ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் கலந்துகொண்டனர்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.