தமிழக அரசின் வனக் கொள்கை விரைவில் அறிவிப்பு

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

ராமநாதபுரம், கடலூரில் தகவல் தொழில்நுட்பவியல் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் எம்.மணிகண்டன் சட்டப்பேரவையில் அறிவித்தார். சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சர் மணிகண்டன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்புகள்: தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த நிறுவனங்களின் முதலீட்டினைப் பெருக்கிடும் நோக்குடன் ராமநாதபுரம், கடலூரில் மாவட்டங்களில் தகவல் தொழில்நுட்பவியல் பூங்காக்கள் உருவாக்கிட தேவையான சாத்தியக்கூறுகள் கண்டறிந்து அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும். நிதி தொழில்நுட்பம்: நிதித் துறையில் போட்டி, புதுமை உற்பத்தித் திறன் உருவாக்கிடவும் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்திடவும் ஒரு நிதி தொழில்நுட்ப சிறப்பு மையம் சென்னையில் அமைக்கப்படும். இந்தத் தொழில்நுட்ப மையம் பணம் இலக்கமாக்குதல் மட்டுமல்லாமல் நாணய தரவையையும் ஏற்படுத்தும். மத்திய அரசு, தமிழ அரசு மற்றும் துணிகர மூலதன நிதியம் ஆகியவை இணைந்து முறையே ரூ.5.75 கோடி ரூ.5.75 கோடி மற்றும் ரூ.11.50 கோடி முதலீட்டில் நிதி தொழில்நுட்பம் மையம் முதல்முறையாக சென்னையில் அமைக்கப்படும். எல்காட் இ-மார்க்கெட் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். கணினித் தமிழ்ப் பாடம்: தமிழ் மொழியைக் கணினிக்குக் கொண்டு செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இதனைக் கருத்தில் கொண்டு தமிழ் இணையக் கல்விக் கழகம் கணினித் தமிழ்ப் பாடத்திட்டத்தினை பட்டயப் படிப்பாக இணைய வழியில் பயிற்றுவிக்கும். இதனால், மாணவர்கள், ஆய்வாளர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் பயன்பெறுவர். இந்தப் பாடத்திட்டம் ரூ.20 லட்சம் செலவில் உருவாக்கப்படும். செல்லிடப்பேசியில் அரசு கேபிள்: தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சந்தாதாரர்களுக்கு கூடுதலாக ஓடிடி சேவை மூலம் விரும்பும் தொலைக்காட்சி சேவை நிகழ்ச்சிகள், அரசின் பல்துறை சார்ந்த நிகழ்ச்சிகள் மற்றும் இதர நிகழ்ச்சிகளை உலகில் எங்கிருந்தவாறும், செல்லிடப்பேசி, மடிக்கணினி, கணினி, மேகக் கணினியம் போன்ற பல்திரைக் கருவிகள் மூலம் கண்டு களிக்கும் வசதி வழங்கப்படும். இந்தச் சேவையின் மூலம் தொடக்கத்தில் 50 முதல் 100 தொலைக்காட்சி சேனல்கள்கள் வழங்கப்படும் என்று அவர் அறிவித்தார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.