பகுதியளவு முழங்கால் மாற்று அறுவை சிகிச்சையில் பார்வதி மருத்துவமனை சாதனை

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சென்னை 27 ஜூலை, 2018: டாக்டர் எஸ். முத்துகுமார், தலைவர் மற்றும் தலைமை முட நீக்கியல் அறுவை சிகிச்சை நிபுணர், பார்வதி மருத்துமனை, சென்னை அவர்கள் இன்று வெற்றிகரமாக முழங்கால் மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளார். வழக்கமான முழுமையான முழங்கால் மாற்று சிகிச்சை போலன்றி பகுதியளவில் நோயாளியின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் சிறப்பாக செய்துள்ளார். இந்த அறுவை சிகிச்சை நடைமுறையானது யுனிகான்டைலர் முழங்கால் ஆர்தோபிளாஸ்டி எனப்படும் மிகவும் சிறிய வகை அறுவை சிகிச்சையாகும். இந்த சிகிச்சை ஒரு பெண்ணுக்கு மேற்கொள்ளப்பட்டது. இந்த சிகிச்சையை டாக்டர் எம்.கே. வெற்றி குமார், ஆலோசகர் முழங்கால் அறுவை சிகிச்சை நிபுணர், பார்வதி மருத்துவமனை, சென்னை ஆகியோரடங்கிய மருத்துவ குழு மேற்கொண்டது. இந்த அறுவை சிகிச்சையானது முழுமையான முழங்கால் மாற்று சிகிச்சையாகும். அத்துடன் சிகிச்சை முடிந்த பிறகு ஏற்படும் அசௌகரியங்கள் இதில் ஏற்படாது. அதேபோல நோயாளி விரைவாக குணமடைவதோடு, வழக்கமான முழங்கால் இணைப்பைப் போல நடமாட இயலும்.
பகுதியளவு முழங்கால் மாற்று அறுவை சிகிச்சையானது, யுனிகான்டைலர் முழங்கால் ஆர்தோ பிளாஸ்டி (யுகேஏ) என்று அழைக்கப்படுகிறது. ஆர்த்ரைடிஸ் நோயால் அவதிப்படும் நோயாளிகளுக்கு இத்தகைய அறுவை சிகிச்சை மிகவும் பயனுள்ளது. அதுவும் முழங்காலில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வலி ஏற்பட்டு அவதிப்படும் நோயாளிகளுக்கு மிகவும் சிறந்ததாகும். முழங்காலில் வலி ஏற்படுவதானது சிலருக்கு காலை விரைப்பாக நீட்டும்போது ஏற்படாது. இத்தகையோருக்கு இதுபோன்ற பகுதியளவு அதாவது கான்டைலர் ஆர்தோ பிளாஸ்டி அறுவை சிகிச்சை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இத்தகைய அறுவை சிகிச்சையானது தேவகி என்ற 47 வயது இல்லதரசிக்கு மேற்கொள்ளப்பட்டது. இவருக்கு இரண்டு கால்களிலும் வலி இருந்தது. இந்த வலி காரணமாக இவரால் நடமாட முடியவில்லை. இதனால் இவர் வீட்டிலேயே முடங்கிப் போகும் சூழல் உருவானது. பார்வமதி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருவதற்கு முன்பு, இவருக்கு முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டிருந்தது. ஆனால் அத்தகைய சிகிச்சை மேற்கொள்வதில் அவருக்கு உடன்பாடு கிடையாது.
இவருக்குள்ள நோயின் தீவிரத்தன்மையை டாக்டர் எம்.கே. வெற்றி குமார், பார்வதி மருத்துவமனை ஆலோசனை அறுவை சிகிச்சை நிபுணர் கூறியதாவது: நோயாளிக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினையை மருத்துவ ரீதியாக ஆராய்ந்தபோது முழங்காலின் உள்பகுதியின் ஒரு புறத்தில் இணைப்பு பகுதியில் பிரச்சினை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதியில் மட்டும் சிகிச்சை அளிக்கலாம் என பரிந்துரைக்கப்பட்டது. இதனால் முழுமையாக முழுங்காலை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்பதும் தெரிவிக்கப்பட்டது. இரண்டாவது காலிலும் இதேபோன்ற சிகிச்சை செய்த இரண்டொரு நாளில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பலாம் என்ற உத்தரவாதமும் அவருக்கு அளிக்கப்பட்டது.
முழுமையாக மருத்துவ பரிசோனை செய்தபிறகு, மருத்துவ ஆலோசனை மற்றும் பிசியோதெரபி மூலம் வலி குறைவதோடு அவரால் இயல்பாக நடமாட முடியும் என்பது தெரியவந்தது. தற்போது அவர் முன்பிருந்த நிலையை விட சிறப்பாகவே உணர்கிறார். கூடுதலாக அவர் முழுமையாக குணமடைய மற்றொரு காலிலும் இதேபோன்ற அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது. முதலில் வலது முழங்காலிலும் பிறகு இடது முழங்காலிலும் அறுவை சிகிச்சை மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டது.
இது தொடர்பாக டாக்டர் எம்.கே. வெற்றி குமார் கூறியதாவது: மருத்து புள்ளி விவரங்களின்படி, சர்வதேச அளவிலும் 60 சதவீத அளவுக்கு முழங்கால் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு வழக்கமான மாற்று அறுவை சிகிச்சைதான் பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் ஆக்ஸ்போர்டு மருத்துவ பல்கலைக் கழகம் மேற்கொண்ட ஆய்வில் பகுதியளவு முழங்கால் அறுவை சிகிச்சை எளிதாகவும், குணமடைவது விரைவாகவும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பகுதி மட்டும் அறுவை சிகிச்சை மூலம் நிக்கப்படுகிறது. அறுவை சிகிச்சையின்போது நோயாளியின் எதிர்பார்ப்பு அதாவது அவர் நடக்கும் விதம் உள்ளிட்டவை ஆராயப்பட்டு அதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்படுகிறது. அத்துடன் நோயாளியின் வாழ்நாள் காலம் ஆகியவையும் கணக்கிடப்பட்டு, வாழ்நாளை அவர் வலியின்றி கழிப்பதற்கு வகை செய்யப்படுகிறது. என்றார்.
திருமதி தேவகி, சிகிச்சை பெற்ற நோயாளி கூறியது: முழங்கால் வலி காரணமாக தோன்றும் வலியை விவரிக்க வார்த்தைகளே கிடையாது. இரண்டு காலிலுமே கடுமையான வலியை அனுபவித்து வந்தேன். இதனால் நிற்கவே முடியாத நிலை இருந்தது. மருத்துவ ஆய்வுக்குப் பிறகு டாக்டர்கள் இது தொடர்பாக அனைத்து விஷயங்களையும் தெளிவுபடுத்தினர். அறுவை சிகிச்சைக்குப் பிறகு நான் விரைவாக குணமடைந்து வருவதை உணர்கிறேன். என்னால் இப்போது எழுந்து நிர்க முடிகிறது என்றும், மலையேற முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளதாக அவர் கூறினார். இன்னும் 3 நாள்களில் திருமதி தேவகி மருத்துவனையிலிருந்து வீடு திரும்புவார். முழுமையாக முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்திருந்தால் அவர் நடமாடுவதற்கு நீண்ட காலம் ஆகியிருக்கும். பகுதியளவு முழங்கால் மாற்று சிகிச்சையை பார்வதி மருத்துவமனை மேற்கொண்டு அவரால் விரைவாக நடமாடவும், சிகிச்சைக்குப் பிறகான வலி குறைந்ததையும் உணர்ந்துள்ளார்.


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.