சென்னையின் வேளச்சேரியில் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை குழுமத்தின் மிக நவீன மருத்துவமனை ஆரம்பம்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சென்னை, 2018 நவம்பர் 17: 1957ஆம் ஆண்டிலிருந்து கண் மருத்துவ சிகிச்சையில் உலகளவில் புகழ்பெற்ற முன்னோடிகளாகத் திகழும் டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை, சென்னையில் அதிவேகமாக வளர்ச்சியடைந்துவரும் பகுதிகளுள் ஒன்றான வேளச்சேரியில் வசிக்கும் மக்களுக்காக தனது மிக நவீன மருத்துவமனையை தொடங்கியிருக்கிறது.
இந்த தொடக்கவிழா நிகழ்வில் தலைமை விருந்தினராக பங்கேற்ற பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ், தனது கண்களை தானம் செய்வதாக அறிவித்தபோது, அங்கு கூடியிருந்த சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பார்வையாளர்களின் பலத்த கையொலி எழுந்தது. அகர்வால்ஸ் குழும கண் மருத்துவமனைகளின் தலைவர் பேராசிரியர் அமர் அகர்வால், மற்றும் மருத்துவ சேவைகள் பிரிவின் தலைவர் டாக்டர். அஷார் அகர்வால் மற்றும் பிற பிரமுகர்கள் இவ்விழாவில் பங்கேற்றனர்.
தங்களது வேளச்சேரி மருத்துவமனை தொடங்கப்படுவதை குறிக்கும் வகையில், வறுமை கோட்டிற்கு கீழே உள்ள 100 நபர்களுக்கு கட்டணமில்லாமல் முற்றிலும் இலவசமாக கண் அறுவைசிகிச்சைகள் செய்யப்படும் என்று இம்மருத்துவமனை அறிவித்திருக்கிறது.
இந்நிகழ்ச்சியின்போது பேசிய திரைப்பட நடிகை கீர்த்தி சுரேஷ், "இந்நிகழ்வில் கலந்துகொள்வதும் மற்றும் எனது கண்களை தானம் செய்வதும் எனக்கு பெருமகிழ்ச்சியை அளித்திருக்கிறது. கண் சிகிச்சை பிரிவில் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை ஒரு முன்னோடியாக தொடர்ந்து இருந்து வருகிறது. தங்களது பணி மற்றும் ஆராய்ச்சியில் பல சாதனைகளை செய்திருக்கும் இவர்களுக்கு பல கவுரவங்களும், பாராட்டுகளும் கிடைத்திருக்கின்றன. வேளச்சேரியில் உள்ள இம்மருத்துவமனை தொடக்கவிழாவிற்கு என்னை அழைத்ததற்காக டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனைக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 100 நபர்களுக்கு கட்டணமில்லாமல் இலவச அறுவைசிகிச்சையை செய்ய முன்வந்திருக்கும் அவர்களின் தாராள மனதையும் மற்றும் சேவையையும் நான் மனதார பாராட்டுகிறேன்," என்று கூறினார்.
கண் மருத்துவ சிகிச்சையில் சிறப்பான சேவைக்காக அயராது பணியாற்றிவரும் டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை மீது புகழாரம் சூட்டிய அவர், கண் தானத்தின் முக்கியத்துவத்தையும், அவசியத்தையும் வலியுறுத்தினார். "கண் தானம் என்பது ஒரு சிறப்பான நோக்கமாகும். வேறொருவரின் வாழ்க்கையில் ஆக்கபூர்வ மாற்றத்தை உருவாக்க உதவ தங்களது கண்களை தானம் செய்ய உறுதிமொழி ஏற்க அதிக எண்ணிக்கையில் மக்கள் முன்வரவேண்டும். இம்மருத்துவமனையில் இடம்பெற்றுள்ள வசதிகளும் மற்றும் மருத்துவ பணியாளர்களின் அனுபவமும் இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அளப்பரிய சேவையை வழங்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்," என்று கீர்த்தி சுரேஷ் மேலும் கூறினார்.
அகர்வால்ஸ் குழும கண் மருத்துவமனைகளின் தலைவர் பேராசிரியர் அமர் அகர்வால் தனது உரையில் கூறியதாவது: "முழுமையான மற்றும் தரமான கண் மருத்துவ சிகிச்சைக்கான தேவையுள்ள பகுதிகளில் எமது சேவைகளை விரிவாக்கம் செய்வது எங்களது கடமை என்று நாங்கள் கருதுகிறோம். இந்த உள்ளார்ந்த உணர்வு விளைவாகவே இந்த வேளச்சேரி மருத்துவமனை உருவாகியுள்ளது. 1957ஆம் ஆண்டிலிருந்து கண் மருத்துவம் மீது உண்மையான பற்றினைக் கொண்டு ஒரு அமைவிடத்திலேயே முழுமையான கண் சிகிச்சை சேவைகளை வழங்குவதற்கு மிக நவீன சாதனங்களை நிறுவியிருப்பது மூலம் உயர்வான சர்வதேச தரநிலைகளை அகர்வால்ஸ் குழும கண் மருத்துவமனைகள் தொடர்ந்து பேணி வருகின்றன".
"இந்தியாவில் காணப்படுகிற பார்வைத்திறன் பிரச்சனைகளுள் ஏறக்குறைய 80%, வருவதற்கு முன்பே தடுக்கப்படக்கூடியவை அல்லது சிகிச்சையின் மூலம் குணப்படுத்தக் கூடியவையாகும். எனினும் விழிப்புணர்வின்மை மற்றும் தரமான கண் சிகிச்சைக்கான அணுகுவசதியின்மை ஆகியவற்றின் காரணமாக குணமடைகிற விகிதாச்சாரம் குறைவாகவே இருக்கிறது மற்றும் இதனால் பல நோயாளிகள் சிகிச்சை அளிக்கப்படாமலேயே பிரச்சனைகளுடன் வாழ வேண்டியிருக்கிறது," என்று அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.






முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.