ஏழை, மாற்றுதிறனாளிகளிக்கு புதிய அறக்கட்டளை- சங்கர் ஐஏஎஸ் அகடாமி

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சங்கர் ஐ.ஏ.எஸ் அகடாமி 2004ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி டி.சங்கரால் தொடங்கப்பட்டது, இந்த் ஐ.ஏ.எஸ் அகடாமி குடிமைப்பணி தேர்வுகளுக்கான பயிற்சி வழங்குவதில் இந்தியா முழுவதும் மிகவும் போற்றத்தக்கதாகவும் இருந்து வருகிறது. இதில் படித்த 900க்கும் மேற்பட்டவர்கள் ஐஏஎஸ் , ஐபிஎஸ் மற்றும் ஐஎபெஸ் போன்ற அரசின் உயர் பதவிகளுக்கு சென்றுள்ளனர். மேலும் போட்டியாளர்களின் லட்சியங்களையும் நனவாக்க இந்த நிறுவனம் உறுதுணையாக இருந்துள்ளது.
இதனை கருத்தில் கொண்டு சங்கர் ஐஏஎஸ் அகடாமி தனது 15ம் ஆண்டு நிறுவன நாளில் 'சங்கர் நினைவு கல்வி மற்றும் தொண்டு அறக்கட்ட்ளை தொடங்கியுள்ளது. சென்னை அண்ணா நகரில் உள்ல சங்கர் ஐஏஎஸ் அகடாமியில் நடந்த விழாவில் "சங்கர் நினைவு மற்றும் தொண்டு அறக்கட்டளையை" ஐஐடி பேராசிரியர் பத்மஸ்ரீ டாக்டர் அசோக் ஜீன் ஜீன்வாலா தொடங்கிவைத்தார், விழாவில் சங்கர் ஐஏஎஸ் அகடாமி இயக்குனர் சங்கர் வைஷ்ணவி பேசுகையில் "நாடெங்கிலும் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய கிராமப்புற, நகர்புற மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் லட்சியக் கனவான குடிமைப்பணித் தேர்வுகளில் வெற்றியடைவதற்கு உகந்த ஆதரவையும், பொருளாதார உதவியையும் இந்த அறக்கட்டளை வழங்கும்" என்றார்.


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.