சென்னையில் அதிநவீன மார்பக புற்றுநோய் சிகிச்சை மையம்: அமைச்சர் விஜயபாஸ்கர் பங்கேற்பு

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சென்னை: கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் மார்பக புற்றுநோய் சிகிச்சை மையம் இன்று திறக்கப்பட்டது. இதனை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், மார்பக பரிசோதனை மையத்தில் 15 நிமிடங்களில் மார்பகப் புற்றுநோய் குறித்த சோதனையை செய்து கொள்ளலாம் என தெரிவித்தார். மேலும் அதிநவீன கருவிகள் இந்த சிகிச்சை மையத்தில் இடம்பெற்றுள்ளன. 3டி மம்மோகிராம் கருவி மூலமாக, மார்பகப் புற்றுநோய் வருவதற்கான அறிகுறி உள்ளதா என்பதை 15 நிமிடங்களில் கண்டறிந்து விடலாம் என தெரிவித்தார். தற்போதைய காலகட்டத்தில் 30 வயதிலிருந்து 40 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு மார்பக புற்று நோய் பாதிப்பு அதிக அளவில் ஏற்பட்டு வருகிறது. இது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்திலேயே இந்த அதிநவீன சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து, அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி குழு தலைவர், நான்கு பெண் அமைச்சர்கள் மற்றும் என்.ஜி.ஓ குழு ஆகியோர் பங்கேற்று இந்த நோய் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக தெரிவித்தார். மேலும் இந்த மையத்தில் வைக்கப்பட்டு அனைத்து அதிநவீன கருவிகளும் சுமார் ரூ.4.5 கோடி மதிப்புள்ளவை என தெரிவித்தார். இந்த கருவிகள் மூலமாக புற்றுநோய் அறிகுறிகள் மற்றும் புற்றுநோய் உருவாவதற்கு முந்தைய நிலையையும் கண்டறியும் திறன் கொண்டைவை என தெரிவித்தார். இந்த மையம் பொதுமக்களுக்கு மிகப்பெரிய அளவில் பயனுள்ளதாக அமையும் என அவர் தெரிவித்தார். மேலும் ஏழை எளிய மக்கள் இந்த மையத்தில் பரிசோதனை செய்துகொள்ள கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை என அவர் கூறினார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.