400 Scooty Pep Prize for Customers @ Saravana Stores, Porur

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

வாடிக்கையாளர்களின் அளவுகடந்த நம்பிக்கையை பெற்றால் எல்லாமே சாத்தியம், சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனர் எஸ்.இராஜரத்னம் பேச்சு.
தங்கம்,வைரம், வெள்ளி,பட்டு, ஜவுளி,ரெடிமேட், பர்னிச்சர் மற்றும் அனைத்து வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனையில் முன்னணி நிறுவனமான சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் சென்னையின் பிரதான் பகுதிகளான ரங்கநாதன் தெரு, புரசைவாக்கம், குரோம்பேட்டை மற்றும் போரூரில் சில்லரை வர்த்தக ஷோரூம்களை நிறுவி வாடிக்கையாளர்களிடம் வரவேற்பை பெற்று சிறப்பாக நடைப்பெற்று வருகிறது.இந்நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு விழாக்கால பரிசுகளாக 400 ஸ்கூட்டிகளை நிறுவனர் எஸ். இராஜரத்னம் வெற்றி பெற்ற வாடிக்கையாளர்களுக்கு வழங்கினார்.

பரிசளிப்பு விழா:-
சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் தனது ரங்கநாதன் தெரு,புரசைவாக்கம், குரோம்பேட்டை மற்றும் போரூர் கிளைகளில் 10.10.2018 முதல் 17.01.2019 வரை உள்ள 100 நாட்களை நான்கு ஷோரூம்களில் ஒவ்வொரு நாளும் அறிவுத்திறன் போட்டியில் வென்ற ஒரு வாடிக்கையாளர் வீதம் நாள் ஒன்றுக்கு நான்கு பேர் என் மொத்தம் 100 நாட்களில் 400 பேரை தேர்ந்தெடுத்து பரிசு வழங்கும் விழா போரூர் சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் வளாகத்தில் நடைப்பெற்றது. இதில் ஸ்கூட்டி பரிசு வென்ற அத்தனை வாடிக்கையாளர்களையும் தனித்தனியாக விழா மேடைக்கு அழைத்து ஸ்கூட்டிக்களின் சாவியை வழங்கி சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனர் எஸ். இராஜரத்னம் பேசியதாவது:-

1968- ம் ஆண்டு தி.நகர், ரங்கநாதம் தெருவில் தொடங்கப்பட்ட எங்கள் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு தரமான பொருட்களை சரியான விலைக்கு விற்றாதால் மக்களின் நம்பிக்கையை பெற்றோம். நம்பிக்கை நன் மதிப்பாக மாறியது. மக்கள எங்கள் மீது வைத்திருக்கின்ற் அளவு கடந்த நம்பிக்கையும், எங்கள் உழைப்பு மற்றும் அக்கரையுமே எங்கள் மூலதனமாக அமைந்தது.
வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யும் பொருளாக இருந்தாலும், அவர்களுக்கு தாமாக முன் வந்து நாங்கள் வழங்கும் பரிசு பொருளாக இருந்தாலும் சரி நீண்ட கால பயன்பாட்டுக்கு ஏற்ற பொருளை வழங்குகின்றோம். அந்த அடிப்படையில் மக்கள் விரும்புகின்ற நீண்ட நாள் பயன்படக் கூடிய ஸ்கூட்டியை தேர்வு செய்து 2014 -ம் ஆண்டு 200 ஸ்கூட்டி வழங்கினோம். அது அப்படியே உயர்ந்து 2016-ல் 300 ஸ்கூட்டிகளாகவும், 2018 -ல் தமிழகமே பாராட்டுகின்ற வகையில் 400 ஸ்கூட்டிகளாக உயர்ந்து இப்போது உங்கள் முன்னால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் ஆர்வம் :-
தீபாவளி முதல் பொங்கல் வரை உள்ள அனைத்து பண்டிகைகளையும் உள்ளடக்கிய 100 நாட்களை தேர்வு செய்து வாடிக்கையாளர்களுக்கு அறிவுத்திறன் போட்டி ஸ்கூட்டி பரிசுத் திட்டத்தை ஆரம்பித்தோம். அதில் வாடிக்கையாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர். அதில் வெற்றியாளர்களை தேர்வு செய்து இப்போது பரிசுகள் வழங்கப்படுள்ளன. சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் வாடிக்கையாளர் நலனை கருத்தில் கொண்டு நாங்கள் தொடர்ந்து செயலாற்றி அவர்களின் நன்மதிப்பை பெற்று வருகின்றோம். வாடிக்கையாளர்களின் அளவு கடந்த நம்பிக்கையை பெற்றால் எல்லாமே சாத்தியம் என்று பேசினார். அப்போது சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் நிர்வாக இயக்குனர் ஆர்.சபாபதி உடனிருந்தார். திரளான வாடிக்கையாளர்கள் ஸ்கூட்டி பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டனர்.






முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.