SUDHA Fertility Hospital Opened by Sengottaiyan

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சுதா மருந்துவமனை கருத்தரிப்பு & மகளிர் நல மையம், திருமணமாகி நீண்ட நாட்களாகக் குழந்தைகள் இல்லாமல் ஒருவித ஏக்கத்தில் உள்ள தம்பதியினருக்கு வரப்பிரசாதமாக அமைத்து, கோவையிலும், ஈரோட்டிலும், கடந்த 30 வருடங்களாக அரியதொரு மருத்துவப், பனியை ஆற்றி வருகிறது சுதா மருத்துவமனை. தற்போது சேலத்திலும் கொழும்பிலும் ( இலங்கை) தொடங்கப்பட்டுள்ளது, " சென்னையில் சுதா கருத்தரித்தல் மையம் அமைக்க வேண்டும் என்பது எங்களது நீண்ட நாள் ஆசை. அதன்படி நேற்று பிப்ரவரி 17 முதல் சென்னையில் பூந்தமல்லி ரோட்டில் பழைய தாஸ் பிரகாஷ் ஹோட்டல் எதிரில் துவங்கியுள்ளோம். சமுதாயத்தில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் ஒரு தரமான மருத்துவச் சேவையை குறைந்த செலவில் வழங்க வேண்டும் என்பதே எங்களது நோக்கம், மருத்துவத் துறைக்கு தங்களை முழுவதும் அர்ப்பணித்துக் கொண்ட தலை சிறந்த மருத்துவக் குழு மற்றும் சிறப்புப் பயிற்சி பெற்ற மருத்துவ ஊழியர்களின் சேவையில் கருத்தரித்தல் சிகிச் சையில் உலகத்தரத்திற்கு நிகரான வெற்றிகளைக் கண்டுள்ளது சுதா மருத்துவமனை என்கிறார் இதன் இயக்குநரும் தலைமை மருத்துவருமான டாக்டர். தனபாக்கியம். இம் மருத்துமனையின் மற்றொரு இயக்குநரான டாக்டர் .பிரதீபா மருத்துவ மனையின் பெருமைகளையும், சாதனைகளையும் பற்றி கூறுகையில் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளை ஐ.வி.எப் எனப்படும் டெஸ்ட் ட்யூப் முறையில் பிரசவித்துள்ளோம், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தம்பதிகள் ஐ.யூ.ஜ முறையில் பயன் பெற்றுள்ளனர். செயற்கைக் கருத்தரித்தல் சிகிச்சை முறையில் இந்திய அளவில் அதிக வெற்றி விகிதத்தைக் கண்டுள்ளோம், இடுப்புக்குக் கீழ் செயலிழந்த தாம்பத்திய உறவு கொள்ள முடியாத ஆணிடமிருந்து (வயது 64) TESA முறையில் விந்தணு எடுத்து கருத்தரிக்கச் செய்துள்ளோம், பிற மருத்துவமனைகளில் 15 முறை ஐவிஎப் சிகிச்சை பெற்று பலனின்றிப் போன தம்பதியினருக்கு சுதா மருத்துவமனைவில் குழந்தை பிறக்கச் செய்துள்ளோம், MRKH என்ற கருப்பை வளர்ச்சி குன்றி குறையோடு பிறந்த பெண்ணிற்கு அவரது கரு முட்டை எடுத்து வாடகைத் தாய் மூலம் குழந்தை பிறக்க செய்துள்ளோம். லண்டன் வாழ் இந்திய தம்பதியினருக்கு பல வருடங்கள் குழந்தை இல்லாமல் அங்கு சிகிச்சை அளித்தும் பயன் இல்லாத நிலையில் சுதா மருத்துவமனை சிகிச்சை மூலம் குழந்தைப் பேறு கிடைத்துள்ளது. விழாவில் சுதா மருத்துவமனையின் சேர்மன் Dr.கந்தசாமி அவர்கள் குழந்தையின்மை பிரச்சனை என்னென்ன காரணங்களால் ஏற்படுகிறது என்றும், குழந்தையின்மை பிரச்சனை தவிர்ப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் உடற்பயிற்சிகள் குறித்து விரிவாக கூறினார். மேலும் பல உலக கருத்தரங்குகளில் பங்கு பெற்று செயற்கை கருத்தரிப்பு சிகிச்சையில் அதி நவீனங்களை உடனுக்குடன் அறிமுகப்படுத்துவதன் மூலம் குழந்தையின்மை சிகிச்சையில் அதிக வெற்றி வாய்ப்பினை உறுதி செய்கிறது சுதா மருத்துவக் குழு என்றும் சேர்மன் Dr.கந்தசாமி தெரிவித்தார். நேற்று ( 17.02.2019 - ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற சுதா மருத்துவமனை திறப்பு விழாவில் தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு. K.A. செங்கோட்டையன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மருத்துவமனையை துவக்கி வைத்தார்.GG மருத்துவமனை தலைவர் Dr.கமலா செல்வராஜ் அவர்கள் குத்துவிளக்கேற்ற, சீனியர் ஆடிட்டர் திரு.N.பழனிவேலு அவர்கள் முன்னிலை வகித்தார். மேலும் சுதா மருத்துவமனை மூலம் குழந்தை பாக்கியம் பெற்ற தம்பதிகள் பலரும், முக்கிய பிரமுகர்களும் நண்பர்களும் உறவினர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் என்று சுதா மருத்துவ மனையின் நிர்வாக இயக்குனரான டாக்டர். சுதாகர் அவர்கள் தெரிவித்தார்.






முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.