சுப்பிரமணியசாமி உருவபொம்மை எரிப்பு; ஆலந்தூரில் தி.மு.க.வினர் போராட்டம்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

ஆலந்தூர், பிப். 9- ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முதல்- அமைச்சர் கருணாநிதி மீது சுப்பிரமணியசாமி அவதூறாக பேசியதை கண்டித்து ஆலந்தூர் நகராட்சி அலுவலகம் முன்பு தி.மு.க.வினர் சுப்பிரமணிய சாமியின் உருவபொம்மையை தீவைத்து எரித்தனர். சுப்பிரமணியசாமி படங்களை செருப்பால் அடித்து கிழித்தெரிந்தனர். ஆலந்தூர் நகர தி.மு.க. செயலாளர் குணா, நகரமன்ற தலைவர் துரைவேலு ஆகியோர் தலைமையில் நடந்த இப் போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட தி.மு.க. தொண்டர்கள் கலந்து கொண்டனர். நங்கநல்லூர் ஸ்டேட் பாங்காலனியில் ஆலந்தூர் நகர மன்ற துணைத் தலைவர் சந்திரன் தலைமையில் சுப்பிரமணியசாமி உருவ பொம்மை எரிக்கப்பட்டது. அவரது படங்களும் தீவைத்து எரிக்கப்பட்டன. பழவந்தாங்களில் தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் இப்ராகிம் தலைமையில் தி.மு.க.வினர் சுப்பிரமணிய சாமி உருவ பொம்மையை எரித்தனர். பெருங்களத்தூரில் பேரூராட்சி தலைவர் சேகர் தலைமையில் சுப்பிரமணிய சாமிஉருவபொம்மை எரிக்கப்பட்டது.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.