சினிசேவா விருது பெற்ற \'நர்த்தகி\'

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சென்னை, பிப்.24 தமிழ் சமூகத்தின் மேல் அக்கறையுடன் செயல்பட்டுவரும் எக்ஸ்னோரா இண்டர்நேஷனல் என்கிற தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் திரைப்படத் துறையில் சமூகத்தின் மேல் அக்கறைகொண்டு செயல்பட்டு வருபவர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்து வருகின்றனர். நடிகை மனோரமா, நடிகர் கமல்ஹாசன் போன்றோர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் இவ்விருது, \'நர்த்தகி\' திரைப்படத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது. புன்னகை பூ கீதா, தயாரித்திருக்கும் இப்படத்தை ஜி.விஜயபத்மா இயக்கியிருக்கிறார். எக்ஸ்னோரா மற்றும் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் \'நர்த்தகி\' திரைபப்டத்தை வியாபார நோக்கில்லாமல் தயாரிக்க முன்வந்ததற்காக தயாரிப்பாளர் புன்னகை பூ கீதாவிற்கும், திருநங்கைகள் பற்றி துணிச்சலான கருத்துக்களை முன்வைத்ததற்காகவும், உலகிலேயே முதன்முறையாக ஒரு திருநங்கையை கதாநாயகியாக நடிக்க வைத்ததற்காகவும், இயக்குநர் ஜி.விஜயபத்மாவிற்கும், வியாபார நோக்கில்லாமல் ஒரு சமூகத்திற்கு செய்யவேண்டும் என்ற நோக்கில் திருநங்கை சமூகத்தின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் பாடல்களுக்காவும், முழுக்க முழுக்க இந்திய இசைக்கருவிகளைப் பயன்படுத்தி முழு திரைப்படத்தின் இசையமைப்பையும் வடிவமைத்தற்காக ஜி.வி.பிரகாஷ் குமாருக்கும், திருநங்கைகள் பற்றிய உருக்கமான பாடல்களுக்காக நா.முத்துக்குமாருக்கும் விருதுகள் வழங்கப்பட்டது.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.