பாரிமுனை காளிகாம்பாள் கோவில் ராஜகோபுர கும்பாபிஷேகம்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சென்னை, பிப். 7- காளிகாம்பாள் கோவில் ராஜகோபுர கும்பாபிஷேகம் இன்று காலை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். சென்னை பாரிமுனை தம்பு செட்டி தெருவில் உள்ள காளிகாம்பாள் கமடேஸ்வரர் கோவில் மேற்கு ராஜ கோபுரம் சிவாச்சாரியார் அறக்கட்டளை சார்பில் ரூ.1 கோடி செலவில் கட்டப்பட்டது. இதற்கான பணி 2004-ம் ஆண்டு தொடங்கப்பட்டு 2010-ல் நிறைவு பெற்றது.

கடந்த 3-ந்தேதி யாக சாலை பூஜைகள் தொடங்கின. மேலும் அன்னதான கூடமும், கோவில் முழுவதும் சலவை கற்களும் பதிக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டு உள்ளது. ராஜகோபுர கும்பாபி ஷேகம் இன்று காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் நடந்தது. கும்பாபிஷேக விழாவில் ரத்தின கிரி பலமுருகனடிமை சுவாமிகள், அமைச்சர் பரிதிஇளம் வழுதி, நீதிபதி கிருபாகரன், இந்து அற நிலையத்துறை ஆணையர் சம்பத், வட சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர் வி.எஸ்.பாபு எம்.எல்.ஏ., சேகர்பாபு எம்.எல்.ஏ. மணி வேலன், சுரேஷ்குமார், அயனாவரம் தனஞ்செயன், சுப்பையா, லண்டன் விநாயகர் கோவில் நிர்வாகிகள், மலேசியா மகா மாரியம்மன் கோவில் நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை சிவாச்சாரியார் அறக்கட்டளை நிர்வாகிகள் தலைவர் தி.பொ. காளிதாஸ், சிவாச்சாரியர் செயலாளர் வி.சோமசேகர சிவாச்சாரியர், சிவஸ்ரீ தி.ஸா. ஸ்வாமி ஸதாசிவம் சிவாச்சாரியர், சிவஸ்ரீ டாக்டர் தி.ஸா, ஷண்முக சிவாச்சாரியர், சிவஸ்ரீ கார்த்திக் சிவாச்சாரியர் ஆகியோர் முன்னின்று நடத்தி அனைத்து ஏற்பாடுகளையும் செய்து இருந்தனர்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.