ஈராக்கில் 3 கார் குண்டுகள் வெடித்து; 6 பேர் பலி, 75 பேர் காயம்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

பாக்தாத், பிப்.9- ஈராக்கில் எண்ணெய் வளம் உள்ள கிர்குக் நகரில் தொடர்ந்து 3 குண்டுகள் வெடித்தன. முதல் கார் குண்டு ஒரு போலீஸ் அதிகாரியை குறி வைத்து நடந்தது. 2-வது கார் குண்டு போலீஸ் ரோந்து வாகனத்தை குறி வைத்து நடந்தது. 3-வது கார் குணடு குர்திஷ் பாதுகாப்பு படைகள் பயன்படுத்தி வந்த கட்டிடத்துக்கு வெளியே வெடித்தது. இந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் 2 போலீஸ்காரர்கள் உள்பட 6 பேர் பலியானார்கள். 75 பேர் காயம் அடைந்தனர். கடந்த மாதம் மட்டும் மொத்தம் 200 பேர் பல்வேறு தாக்குதல்களில் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.