அருஷி கொலையில் பெற்றோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய கோர்ட்டு உத்தரவு

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

காசியாபாத், பிப்.9- உத்தரபிரதேச மாணவி அருஷி கொலை வழக்கில் அவருடைய பெற்றோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய காசியாபாத் சிறப்பு சி.பி.ஐ. கோர்ட்டு உத்தரவிட்டது. வருகிற 28-ந் தேதி அன்று கோர்ட்டில் ஆஜராகுமாறு அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. முன்னதாக, வழக்கை முடித்துக் கொள்வதாக சி.பி.ஐ. தாக்கல் செய்த மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்து விட்டது. அருஷியின் பெற்றோர் மீது கொலை, தடயங்களை அழித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆருஷி என்ற 14 வயது மாணவி கொல்லப்பட்டார். நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கு முதலில் மாநில சி.ஐ.டி. விசாரித்து பின்னர் சி.பி.ஐ. விசாரித்தது. குற்றவாளி யார் என்பது பற்றி எந்த முடிவும் எடுக்க முடியாத நிலையில், சி.பி.ஐ. தனது விசாரணையை முடித்துக்கொண்டது. இந்நிலையில் ஆருஷி கொலை வழக்கை மீண்டும் விசாரிக்கும் படி மத்திய சட்ட அமைச்சர் வீரப்பமொய்லி உத்தரவிட்டார். இதனால் சி.பி.ஐ. இந்த கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க தொடங்கியது. விசாரணையில் ஆருஷியின் பெற்றோர்களுக்கு கொலையில் முக்கிய தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதனால், ஆருஷியின் பெற்றோர்கள் ராஜேஷ், நுபூர் தல்வார் இருவரும் முக்கிய குற்றவாளிகளாக வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். இருவரையும் வருகிற பிப்ரவரி 28-ந் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தபட வேண்டும் என நீதிபதி பிரிதி சிங் உத்தரவிட்டுள்ளார். சி.பி.ஐ. குற்றசாட்டை எதிர்த்து ராஜேஷ் கொடுத்த மனுவை நீதிபதி பிரிதி சிங் நிராகரித்தார். இந்திய பீனல் கோடு, பிரிவு 302 (கொலை), 201 (சாட்சியங்களை சிதைத்தல்), 34 (சுய காரியத்திற்காக சிலருக்கு எதிராக முனைவது) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.