செக் மோசடி புகார்; சரண்யா மோகனுக்கு நடிக்கத் தடை

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சென்னை,பிப்;9- செக் மோசடி செய்த குற்றத்திற்காக, நடிகை சரண்யா மோகனுக்கு மலையாள சினிமா நடிக்க தடைவிதித்துள்ளது. யாரடி நீ மோகினி, வெண்ணிலா கபடி குழு, பஞ்சாமிர்தம், ஈரம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சரண்யா மோகன். மலையாளத்திலும் முன்னணி நடிகையாக உள்ளார். இருமொழிகளிலும் இவருக்கு நிறைய இளம் ரசிகர்கள் உள்ளனர். தற்போது ?அழகர்சாமியின் குதிரை? என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து விரைவில் திரைக்கு வர உள்ளது. இதற்கிடையில் சரண்யா மோகன் மீது மலையாள தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு நடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மலையாள பட உலகை சேர்ந்த ஒருவருக்கு சரண்யா மோகன் குறிப்பிட்ட தொகைக்கு செக் கொடுத்து இருந்தாராம். அதை பாங்கியில் போட்ட போது பணம் கொடுக்க வேண்டாம் என பாங்கியில் சொல்லி ?ஸ்டாப் பேமண்ட்? கொடுத்து விட்டாராம். இதனால் ஆத்திரமான அவர், தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். இதனை விசாரித்த தயாரிப்பாளர்கள் சங்கம், சரண்யா மோகனுக்கு மலையாள படங்களில் நடிக்க தடை விதித்துள்ளது. தற்போது சமரச பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. தடை நீக்கப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை,பிப்;9- செக் மோசடி செய்த குற்றத்திற்காக, நடிகை சரண்யா மோகனுக்கு மலையாள சினிமா நடிக்க தடைவிதித்துள்ளது. யாரடி நீ மோகினி, வெண்ணிலா கபடி குழு, பஞ்சாமிர்தம், ஈரம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சரண்யா மோகன். மலையாளத்திலும் முன்னணி நடிகையாக உள்ளார். இருமொழிகளிலும் இவருக்கு நிறைய இளம் ரசிகர்கள் உள்ளனர். தற்போது ?அழகர்சாமியின் குதிரை? என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து விரைவில் திரைக்கு வர உள்ளது. இதற்கிடையில் சரண்யா மோகன் மீது மலையாள தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு நடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மலையாள பட உலகை சேர்ந்த ஒருவருக்கு சரண்யா மோகன் குறிப்பிட்ட தொகைக்கு செக் கொடுத்து இருந்தாராம். அதை பாங்கியில் போட்ட போது பணம் கொடுக்க வேண்டாம் என பாங்கியில் சொல்லி ?ஸ்டாப் பேமண்ட்? கொடுத்து விட்டாராம். இதனால் ஆத்திரமான அவர், தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். இதனை விசாரித்த தயாரிப்பாளர்கள் சங்கம், சரண்யா மோகனுக்கு மலையாள படங்களில் நடிக்க தடை விதித்துள்ளது. தற்போது சமரச பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. தடை நீக்கப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.