ஆஸ்கார் விருதுகள் அறிவிப்பு: \'தி கிங்ஸ் ஸ்பீச்\' படத்துக்கு 4 விருது

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

லாஸ் ஏஞ்சல்ஸ், பிப்.28- 2011-ம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. \'தி கிங்ஸ் ஸ்பீச்\' படம் 4 விருதுகளை தட்டி சென்றது. சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த டைரக்டர், சிறந்த திரைக்கதை ஆகிய பிரிவுகளில் விருதுகள் கிடைத்துள்ளன. சிறந்த நடிகருக்கான விருதை \'தி கிங் ஸ்பீச்\' படத்தில் நடித்த காலின் பிர்த் தட்டி சென்றுள்ளார். சிறந்த நடிக்கைக்கான விருது \'பிளாக்ஸ்வான்\' படத்துக்காக நேட்டல் போர்ட்மேனுக்கு கிடைத்தது. சிறந்த இயக்குனருக்கான விருது \'தி கிங்ஸ் ஸ்பீச்\' படத்துக்காக டாம் ஹூப்பருக்கு கிடைத்தது. சிறந்த ஆவணப்படமாக \'இன்ஸ்சைடு ஜாப்\' தேர்வு பெற்றுள்ளது. சிறந்த வெளிநாட்டுப்படத்துக்கான விருது் \'இன் எ பெட்டர் வேர்ல்டு\' என்ற டென்மார்க் படத்துக்கு கிடைத்துள்ளது. சிறந்த துணை நடிகைக்கான விருதை கிறிஸ்டியன் பேல் தட்டி சென்றுள்ளார். சிறந்த துணை நடிகைக்கான விருதை மெலிசா லியோ பெற்றுள்ளார். \'127 ஹவர்ஸ்\' படத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்த ஏ.ஆர்.ரகுமானுக்கு விருது வாய்ப்பு நழுவியது.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.