மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

மணவாளக்குறிச்சி,பிப். 28- பெண்களின் சபரிமலை என்று புகழப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசிக்கொடை விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. கேரள பெண்கள் இருமுடிக்கட்டுடன் வந்து வழிபடும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. கடலில் குளித்து அம்மனை வழிபடுவது இக்கோவிலின் சிறப்பாகும். இங்கு மாசிக்கொடை விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. மேல்சாந்திகள் கோபாலன் குருக்கள், சட்டநாதன் குருக்கள் ஆகியோர் கொடியேற்றினர். குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில் ஒன்று மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில். இக்கோவில் திருவிழா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 8-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) ஒடுக்குபூஜையுடன் நிறை வடைகிறது. இன்று காலை திருநடை திறக்கப்பட்டு காலை 5 மணிக்கு கணபதி ஹோமமும், 6 மணிக்கு பஞ்சாபிஷேகமும், 6.30 மணிக்கு சிறப்பு நாதஸ்வரத்துடன் தீபாராதனை நடந்தது.காலை 8.15 மணிக்கு மேல் 9.15 மணிக்குள் திருக்கொடி ஏற்றம் நடைபெற்றது. மதியம் 1 மணிக்கு உச்சிகால பூஜையும், 1.15 மணிக்கு அன்னதானமும், மாலை 6 மணிக்கு ஸ்ரீராஜராஜேஸ்வரி பூஜையும், 3006 திருவிளக்கு பூஜையும், 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், இரவு 9 மணிக்கு அத்தாழ பூஜையும் நடக்கிறது. விழாவின் 6-ம் நாள் (4-ந் தேதி) வலியபடுக்கை என்ற மகாபூஜையும், 7-ந் தேதி இரவு 9 மணிக்கு பெரியசக்கர தீ வட்டி ஊர்வலமும், 8-ந் தேதி இரவு 12 மணிக்கு ஒடுக்கு பூஜையும் நடக்கிறது. நிகழ்ச்சி ஏற்பாட்டை இணை ஆணையர் ஞானசேகர், அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீதர், உறுப்பினர்கள் ராஜலிங்கம், மீனாட்சி, அர்ச்சுனன், பத்மநாபபுரம், தேவசம் தொகுதி கண்காணிப்பாளர் நிர்மல்குமார், மண்டைக்காடு ஸ்ரீகாரியம் ஆறுமுகதரன் ஆகியோர் செய்து வருகிறார்கள். 8-ந் தேதி நள்ளிரவு நடைபெறும் ஒடுக்கு பூஜை சிறப்பு வாய்ந்தது. ஏழு பானைகளில் கொண்டு வரப்படும் உணவு பதார்த்தங்கள் அம்மனுக்கு படைக்கப்படும் போது நிலவும் நிசப்தம் இந்த பூஜையின் சிறப்பம்சம். விழாவையொட்டி ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மார்ச் 8ம் தேதி, மாவட்ட உள்ளூர் அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.