மதுரை, கோவை மாநகராட்சி 100 வார்டுகளாக விரிவாக்கம்; மு.க. ஸ்டாலின் சட்ட முன்வடிவு தாக்கல்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சென்னை, பிப். 9- 100 வார்டுகளுடன் மதுரை, கோவை மாநகராட்சிகள் விரிவுபடுத்தப்படுகின்றன. இதற்கான முன் வடிவு சட்டசபையில் துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். அதில் கூறி இருப்பதாவது:- மதுரை, கோவை மாநகராட்சிகளின் அருகில் உள்ள ஒரு சில உள்ளாட்சி அமைப்புகளை இணைத்து 2 மாநகராட்சிகளின் எல்லைகளையும் விரிவாக்குவது என அரசு முடிவு செய்துள்ளது. உள்ளாட்சி அமைப்புகளை சேர்ப்பதால் மதுரை மற்றும் கோவை மாநகராட்சிகளுக்கு அடுத்த வழக்கமான தேர்தலுக்கான கோட்டங்கள் சீரமைப்பு செய்யப்படும். இந்த விரிவாக்கத்தின் பொருட்டு மதுரை, கோவை மாநகராட்சி ஒவ்வொன்றுக்கும் சிற்தொகுதி (வார்டு) எண்ணிக்கை 100 ஆக உயர்த்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே மதுரை மாநகராட்சி 1971-ம் ஆண்டு சட்டம், கோவை மாநகராட்சி 1981-ம் ஆண்டு சட்டம் ஆகியவற்றை மேற்சொன்னதற்கு தகுந்த மாதிரி திருத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த சட்டத்தை ஆரம்ப கட்டத்திலேயே எதிர்ப்பதாக கோவை அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மலரவன் சட்டசபையில் தெரிவித்தார். இந்த தீர்மானம் சட்டசபையில் நாளை (வியாழக்கிழமை) ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படும்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.