சி.எஸ்.ஐ. ஜெசி மோசஸ் பெண்கள் மேல் நிலைப் பள்ளி மாணவிகள் கின்னஸ் சாதனை

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சென்னை,பிப்,10- உலக அமைதிக்காக சி.எஸ்.ஐ. ஜெசி மோசஸ் பெண்கள் மேல் நிலைப் பள்ளி மாணவிகள் 700-பேர், 700-வேடங்களில், 70-அடி நீளமும், 7அடி அகலமும் கொண்ட மிகப்பெரிய மேடையில் 7-மணி நேர அணிவகுப்பு நடத்தி சாதனை படைத்தனர். இது புதிய கின்னஸ் உலக சாதனையாக அமைய உள்ளது. சி.எஸ்.ஐ பேராயத்தின் கீழ் இயங்கிக்கொண்டிருக்கும் இந்த பள்ளி பெண்கள் மேல் நிலைப் பள்ளியானது சென்னை அண்ணா நகரில் 32-ஆண்டுகளாக வெற்றி நடைபோட்டு வருகிறது. இப்பள்ளியில் 2,000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் மேலாளராக உள்ள பேராயர் அறிவர் பேரட் திரு வே. தேவசகாயம் ஐயாவும், சென்னை பேராயக் கல்வி அதிகாரியான வி. சிகாமணியும், இப்பள்ளி தளாளராக உள்ள திருமதி இ.எம். விக்டரும், முதல்வராக உள்ள திருமதி சியாமளா சுரேஷூம் மாணவர்களின் இந்த புதிய கின்னஸ் சாதனைக்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களது அறிவுரையாலும், ஆசிரியர்களின் அயராத உழைப்பினாலும் இப்பள்ளி மிக சிறப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.