தமிழகத்தில் இன்று பிளஸ்-2 தேர்வு தொடங்கியது

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சென்னை, மார்ச்.2- தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு இன்று (புதன்கிழமை) தொடங்கியது. 7 லட்சத்து 23 ஆயிரத்து 525 பேர் தேர்வு எழுதுகிறார்கள். 1890 தேர்வு மையங்களில் தேர்வு நடக்கிறது. தேர்வில் மாணவர்கள் காப்பிஅடிப்பதை தடுக்கவும், துண்டு சீட்டு வைத்திருந்தால், ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் தண்டனை என்பதை விளக்கி பெற்றோர் ஆசிரியர் கழகம் அனைத்து தேர்வு மையங்களுக்கும் நோட்டீசு அச்சடித்து அனுப்பியது. அந்த நோட்டீசுகளை தேர்வு மையத்தில் ஒட்டப்பட்டன. தேர்வில் காப்பி அடித்தால் சிறைத்தண்டனை உண்டு என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மாணவர்கள் பெல்ட், ஷூ அணிந்து செல்ல தடைவிதிக்கப்பட்டிருந்தது. அந்த தடை இந்த வருடம் நீக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 தேர்வு அட்டவணை: 2ஆம் தேதி - தமிழ் முதல் நாள் 3ஆ‌ம் தேதி - தமிழ் இரண்டாம் தாள் 7ஆ‌ம் தேதி - ஆங்கிலம் முதல் தாள் 8ஆ‌ம் தேதி - ஆங்கிலம் இரண்டாம் தாள் 11ஆ‌ம் தேதி - இயற்பியல், பொருளாதாரம், உளவியல். 14ஆ‌ம் தேதி - வேதியியல், அக்கவுண்டன்சி, சுருக்கெழுத்து 17ஆ‌ம் தேதி - கணிதம், விலங்கியல், மைக்ரோ பயாலஜி, நியூட்ரிசியன் அன்ட் டயட்டிக்ஸ் 18ஆ‌ம் தேதி - வணிகவியல், மனை அறிவியல், புவியியல் 21ஆ‌ம் தேதி - உயிரியல், வரலாறு, தாவரவியல், அடிப்படை அறிவியல், வர்த்தக கணிதம் 23ஆ‌ம் தேதி - தட்டச்சு, கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ கெமிஸ்ட்ரி, சிறப்பு மொழி பாடம் 25ஆ‌ம் தேதி - அனைத்து தொழில்பாட தேர்வுகள், அரசியல் அறிவியல், நர்சிங் (பொது), புள்ளியியல்
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.