வருவாய்த்துறை கிராம ஊழியர் சங்கம் சென்னையில் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சென்னை,பிப்;10- தமிழ் நாடு வருவாய்த் துறை கிராம ஊழியர் சங்கத்தினர் தங்களது பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டி தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் குடும்பத்துடன் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். சென்னை காயிதே மில்லத் மணிமண்டபம் அருகில் 10.2.11 அன்று நடைபெற்ற இந்த கவன ஈர்ப்பு குடும்ப உண்ணாவிரத போராட்டத்திற்கு மாநில தலைவர் ஆர். ராஜசேகர் தலைமை வகித்தார். பிரச்சார செயலாளர் ஜி.அழகேசன் வரவேற்புரையாற்ற, செயலாளர் கே. கருணாகரன், அமைப்புச்செயலாளர் ஜி.தருமையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் எம். சுப்பிரமணியம் உண்ணாவிரதத்தை துவக்கி வைத்தார். மாநில பொதுச்செயலாளர் எஸ். தமிழ்ச்செல்வன் விளக்கவுரையாற்றினார். அப்போது வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் 4,800-10,00+1,300 வழங்கவேண்டும் என்றும், வழங்கப்பட்ட பதவி உயர்வை உடனடியாக அமல் படுத்தவேண்டும் எனவும், காலியாக உள்ள இடங்களில் 50% அலுவலக உதவியாளராக நியமனம் செய்து அரசு ஆணை வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார். பல்வேறு சங்கங்களை சேர்ந்த மாநில நிர்வாகிகளான இரா.ரவி ரெங்கராஜன், எஸ்.சீனிவாசன், கே. அன்பழகன், உ.சண்முகம், வை. தருமராஜா, மு. வரதராஜன், த. முருகையன், எம்.ஜெயபால், எம். முருகேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். எஸ்.வி. சேகர் எம்.எல்.ஏ உண்ணாவிரதத்தை முடித்துவைத்தார். மாநில பொருளாளர் சிவ. ரவிச்சந்திரன் நன்றி உரையாற்றினார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.