மேற்கு தாம்பரம் ஸ்ரீ ஸ்வர்ண விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேக விழா

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சென்னை, பிப்;7- மேற்கு தாம்பரம் கேசரியா \' ஸ்வர்ணகிரி \' இராஜ் மோஹன் நகர் அருகே அமைந்துள்ள ஸ்ரீ ஸ்வர்ண விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார். 7-ந்தேதி திங்களன்று காலை நடைபெற்ற இவ்விழாவில் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். ராஜா, தாம்பரம் நகரசபை தலைவர் மணி, துணைத்தலைவர் டி.காமராஜ், லயன் மணி மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கேசரியா ஹவுசிங் டெவலப்பர்ஸ் நிறுவனம் இராஜ் மோஹன் நகரில் சொர்ணகிரி என்ற புதிய குடியிருப்பு ஒன்றை நிறுவ உள்ளனர். இதில் 240 பிளாட்டுகள் அடங்கும். நமது முன்னோர்கள் \" கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் \" - என கூறியதை மனதில் கொண்டு, கேசரியா ஹவுசிங் டெவலபர்ஸ் நிறுவனம் \'சொர்ணகிரி\' குடியிருப்பை உருவாக்குவதற்கு முன்பாக இந்த ஸ்ரீ ஸ்வர்ண விநாயகர் ஆலயத்தை கட்டி அதன் கும்பாபிஷேகத்தையும் சிறப்பாக செய்து அப்பகுதி மக்களை கவர்ந்தனர்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.