ரூ.80 லட்சம் கடன் விவகாரம்; பிரகாஷ்ராஜ் படத்துக்கு தடை கோரி வழக்கு

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

பிரகாஷ்ராஜ், நாகார்ஜுனா இணைந்து நடித்துள்ள படம் பயணம்.தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகியுள்ளது. பிரகாஷ் ராஜே தயாரித்துள்ளார். மொழி படம் மூலம் பிரபலமான ராதாமோகன் இயக்கியுள்ளார். தீவிரவாதிகள் விமானம் கடத்துவதை கருவாக வைத்து உருவாகியுள்ளது. இப்படம் தமிழகமெங்கும் நாளை ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் படத்துக்கு தடை விதிக்க கோரி மகேந்திரகுமார் ஜெயின் என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:- திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமான பிரகாஷ் ராஜ் அபியும் நானும் படத்துக்கு என்னிடம் பல்வேறு தேதிகளில் கடனாக ரூ.79.99 லட்சம் கடன் வாங்கி இருந்தார். அதை திருப்பி தரவில்லை. அவர் தயாரிப்பில் வந்துள்ள பயணம் படத்தின் காப்பிரைட் உரிமையை எனக்கு அளிப்பதாகவும் படத்தை திரையிடுவதற்கு முன் எனக்கு அளிக்க வேண்டிய கடன் தொகையை தருவதாகவும் கடந்த 31.3.10-ல் ஒப்பந்தம் செய்தார். ஆனால் ஒப்பந்தபடி அவர் செயல்படவில்லை. பணத்தை கேட்டு கடந்த 25.1.11-ல் கடிதம் அனுப்பினேன் அதற்கு பதில் இல்லை. எனவே பயணம் படத்தை திரையிடுவதற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டு உள்ளார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.