இங்கிலாந்தை வீழ்த்தியது அயர்லாந்து

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

பெங்களூர், மார்ச்.3- உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று பெங்களூரில் நடந்த ஆட்டத்தில் இங்கிலாந்து- அயர்லாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 327 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டிராட் 92 பந்தில் 9 பவுண்டரிகளுடன் 92 ரன்களும்.இயான் பெல் 86 பந்தில் 6 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 81 ரன்களும், பீட்டர்சன் 59 ரன்களும் எடுத்தனர். 328 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய அயர்லாந்து அணி 49.1 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 329 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 3 விக்கெட் இழப்பிற்கு அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கெவின் ஓ பிரையன் அதிரடியாக விளையாடி 50 பந்தில் சதம் அடித்து உலக கோப்பை கிரிக்கெட்டில் விரைவாக சதம் அடித்த சாதனையை பெற்றார். இவர் 63 பந்துகளில் 13 பவுண்டரி, 6 சிக்சருடன் 113 ரன்கள் எடுத்து வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். அலெக்ஸ் குசக் 47 ரன்கள் எடுத்தார். ஓ பிரையன், குசக் ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 162 ரன்களை சேர்த்தது. மூனி 33 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி தரப்பில் சவான் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.