மோசமான பீல்டிங்கால் தோற்றோம்: இங்கிலாந்து கேப்டன் ஸ்டாரஸ்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

பெங்களூர், மார்ச். 3- உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் அயர்லாந்து 3 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை தோற்கடித்தது. இங்கிலாந்து அணியின் இந்த தோல்வியால் கேப்டன் ஸ்டாரஸ் அதிர்ச்சி அடைந்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- அயர்லாந்து அணியுடன் ஏற்பட்ட இந்த தோல்வி எனக்கு மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. ஏமாற்றம் தருவதாக உள்ளது. எங்களது பீல்டிங் மோசமாக இருந்தது. கெவன் ஓபிரையன் கேட்சை நான் தவறவிட்டேன். அதோடு மேலும் சில கேட்சுகள் தவறவிடப்பட்டது. இதனால் தான் நாங்கள் தோல்வி அடைந்தோம். இதில் எந்த சந்தேகமும் இல்லை. பேட்டிங் பவர்பிளேயில் எங்களது பந்து வீச்சு மோசமாக இருந்தது என்று கூறினார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.