தியாகிகள் எந்த இயக்கத்தைச் சேர்ந்தவராயினும் போற்றுவேன்: கருணாநிதி

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சென்னை,பிப்;10 \"நாட்டிற்காக, மொழிக்காக தியாகம் செய்தவர்கள் எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களைப் போற்றுவேன்,\'\' என, நேற்று ம.பொ.சி., சிலை திறப்பு விழாவில், முதல்வர் கருணாநிதி பேசினார். சிலம்புச் செல்வர் என போற்றப்பட்ட ம.பொ.சிவஞானம் சிலை திறப்பு விழா, நேற்று சென்னையில் நடந்தது. தி.நகர் - போக் சாலை சந்திப்பில் நடந்த விழாவில், சிலையை திறந்து வைத்து முதல்வர் கருணாநிதி பேசியதாவது: தமிழுக்கு, நாட்டிற்கு, தொண்டாற்றுபவர்கள் யார், எந்த இயக்கத்தைச் சார்ந்தவர்கள் எனப் பார்க்காமல், அவர்கள் செய்த தியாகத்தை தொண்டை மாத்திரம் பார்த்து, தியாகிகளை ஏற்றிப் போற்றும் பணியை நான் தொடர்ந்து செய்து வருகிறேன். தி.மு.க., அரசு தொடர்ந்து செய்து வருகிறது. பாரதியாரின் நண்பர், பரணி நெல்லையப்பர் வறுமையில் இருப்பதை அவ்வை துரைசாமி எனக்கு தெரிவித்தார். அவருக்கும், மாதம் 100 ரூபாய் உதவித் தொகை வழங்கினேன். அவரும் எனக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதினார். இதையெல்லாம் உங்களுக்கு ஏன் சொல்கிறேன் என்றால், நீங்களும் எதிர் காலத்தில் இதுபோல் கடமையாற்றி, தமிழுக்கு தொண்டு செய்தவர்களுக்கு சிறப்பு செய்ய வேண்டும் என்பதற்காகத்தான். காமராஜர் என்பவர் இங்கு ஏலம் எடுத்துள்ளார். கிரீடமும், வாளும் நான் வழங்க, காமராஜர் பெற என, இந்த கூட்டணி என்றென்றும் தொடர வேண்டும். இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார். ரூ.55 லட்சத்துக்கு ஏலம் போன தங்கக் கிரீடம்: கடந்த 3ம் தேதி மாலை, சென்னை சைதாப்பேட்டையில் நடந்த தி.மு.க., பொதுக் கூட்டத்தில், முதல்வர் கருணாநிதிக்கு வழங்கப்பட்ட 30 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கக் கிரீடம், வீர வாள் ஆகியவை ஏலம் விடப்பட்டது. இதை, குரோம்பேட்டையைச் சேர்ந்த காமராஜ் என்பவர் 55 லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுத்தார். ஏலத்தில் கிடைத்த தொகையை ம.பொ.சி.,யின் இரு குடும்பத்தினருக்கும் வரும் 13ம் தேதி, கோட்டையில் பிரித்து வழங்குவேன் என முதல்வர் கருணாநிதி அறிவித்தார். ஏலத்தை இருவர் மட்டுமே திரும்பத் திரும்ப கேட்டனர். அமைச்சர் பொன்முடி மட்டும் ஒரே ஒரு முறை 53 லட்ச ரூபாய்க்கு ஏலம் கேட்டார். ஏலம் எடுத்த காமராஜுக்கு முதல்வர் கருணாநிதி, தங்கக் கிரீடத்தை அணிவித்து, வாளை வழங்கினார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.