நடிகர் எஸ்.வி.சேகருக்கு இளைஞர் காங். கண்டனம்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சென்னை, மார்ச். 4- நடிகர் எஸ்.வி.சேகருக்கு இளைஞர் காங்கிர்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை மயிலாப்பூர் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் விஜயசேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- நடிகர் எஸ்.வி.சேகர் காங்கிரசுக்கு வந்த பிறகும் சுபாவத்தை மாற்றவில்லை. சோனியாவை வசைபாடும் ஜெயலலிதாவுக்கு இன்டர் நெட் பேஸ் புக் மூலம் பிறந்த நாள் வாழ்த்து சொல்லியுள்ளார். சோனியா, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் போன்றோருக்கு பிறந்த நாள் வந்த போது வாழ்த்தவில்லை. எதிர் வீட்டை எட்டி பார்க்கும் செயலை எஸ்.வி. சேகர் தொடர வேண்டாம்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.