ஒரிசாவில் பயங்கரம்; அதிகாரி காருடன் எரித்துக்கொலை; தொழிலாளர்கள் போராட்டத்தில் வன்முறை

| [ திரும்பி செல்ல ]

பாலாங்கிர், மார்ச். 4- ஒரிசா மாநிலம் பாலாங்கிர் மாவட்டம் டிட்லாகர் என்ற இடத்தில் தனியார் இரும்பு தொழிற்சாலை உள்ளது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள். சில மாதங்களுக்கு முன் 14 நிரந்தர தொழிலாளர்கள், 45 ஒப்பந்த தொழிலாளர்கள் பல்வேறு காரணங்களுக்காக சஸ்பெண்டு செய்யப்பட்டனர். இதை கண்டித்தும், தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும், சம்பள உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் ஒன்று திரண்டு தொழிற்சாலை முன்போராட்டம் நடத்தினார்கள். அப்போது தொழிற்சாலையின் துணைப் பொதுமேலாளர் ராதேஷியாம்ராய் ஒரு ஊழியருடன் காரில் வெளியே வந்தார். உடனே தொழிலாளர்கள் அவரது காரை சூழ்ந்து கொண்டு முற்றுகையிட்டனர். திடீர் என்று ஆவேசம் அடைந்த தொழிலாளர்கள் காரில் இருந்த ஊழியரையும், டிரைவரையும் வெளியேற்றினார்கள். அதிகாரியை மட்டும் காருக்குள் அடைத்து தீ வைத்தனர். இதில் கார் தீப்பற்றி எரிந்தது. உடனே ஊழியர்கள் ஓடி வந்து அதிகாரியை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் இறந்தார். இதைத் தொடர்ந்து தொழிலாளர்கள் தப்பி ஓடி விட்டனர். போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அதிகாரி எரித்து கொல்லப்பட்டது தொடர்பாக தொழிற்சங்க தலைவர் உள்பட 30 தொழிலாளர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.




வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.