கிரிக்கெட் வாரியத்திடம் ரூ.120 கோடி நஷ்டஈடு கேட்டு ராஜஸ்தான் அணி வழக்கு

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

மும்பை, பிப். 10- கிரிக்கெட் வாரியத்திடம் ரூ.120 கோடி நஷ்டஈடு கேட்டு ராஜஸ்தான் அணி வழக்கு தொடர்ந்துள்ளது. ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) நீக்கியது. பங்குதாரர்கள் விஷயத்தில் விதிமுறைகளை மீறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னர் கோர்ட்டின் மத்தியஸ்தர் நீதிபதி மூலம் இரு அணிகளும் அந்த நீக்கத்துக்கு தடை பெற்றன. இதைத் தொடர்ந்து ஏப்ரல் மாதம் நடைபெறும் ஐ.பி.எல். போட்டியில் 10 அணிகள் பங்கேற்கின்றன. ரூ.120 கோடி கேட்டு வழக்கு கிரிக்கெட் வாரியம் தங்கள் அணியை நீக்கியதன் மூலம் புகழுக்கு பாதிப்பு ஏற்பட்டதாகவும், பலவகையில் விளம்பர வருமானம் இழப்பு ஏற்பட்டதாகவும் அணி உரிமையாளர்கள் கருதினர். இதைத் தொடர்ந்து ரூ.120 கோடி நஷ்டஈடு கேட்டு கிரிக்கெட் வாரியத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பங்குதாரர்களான மனோஜ்பதாலே, சுரேஷ் செல்லாராம், லாச்லேன் முர்தோச் ஆகியோர் மத்தியஸ்தர் நீதிபதி நீதிபதி கிருஷ்ணாவுக்கு மனு அனுப்பி உள்ளனர். இதன் நகல் கிரிக்கெட் வாரியத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.