சட்டசபை தேர்தல்-துப்பாக்கி வைத்திருப்பவர்கள் 15-ந்தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்; போலீஸ் கமிஷனர் உத்தரவு

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சென்னை, மார்ச். 4- சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பதால் துப்பாக்கி வைத்திருப்பவர்கள் 15-ந்தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஏப்ரல் 13-ந்தேதி அன்று நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலையொட்டி, நடத்தை விதிகள் உடனடியாக அமுலுக்கு வருகின்றன. சென்னை நகரில் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருப்பவர்கள், தங்கள் துப்பாக்கிகளை உடனடியாக அந்தந்த காவல் நிலையங்களிலோ, எழும்பூர் ஆயுதப் படையின் ஆயுதக் கிடங்கிலோ அல்லது உரிமம் பெற்ற தனியார் ஆயுதக்கிடங்கிலோ ஒப்படைக்கவேண்டும். தனியார் ஆயுதக்கிடங்கில் ஒப்படைக்கும் உரிமதாரர்கள், அவ்வாறு ஒப்படைத்தற்கான ரசீதை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மார்ச் 15-ந் தேதிக்குள் துப்பாக்கிகள் கண்டிப்பாக ஒப்படைக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.