கல்லூரி மாணவர்கள் ஆத்திரம்: பஸ் தின கொண்டாட்டத்தில் பங்கேற்காத மாணவருக்கு கத்தி குத்து

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சென்னை, மார்ச். 4- பஸ் தின கொண்டாட்டத்தில் பங்கேற்காத கல்லூரி மாணவர் கத்தியால் குத்தப்பட்டார். வியாசர்பாடியைச் சேர்ந்தவர் பிரவீன்குமார். நந்தனம் கலைக்கல்லூரியில் இவர் விலங்கியல் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இக்கல்லூரி மாணவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு, பஸ் தின கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாணவர் பிரவீன்குமார் பங்கேற்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் சிலர் அவரிடம் தகராறில் ஈடுபட்டு வந்தனர். நேற்று மதியம் 1 1/2 மணியளவில் பிரவீன்குமார் கல்லூரி முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது 4 மாணவர்கள் அவரிடம் வந்து பஸ் தின கொண்டாட்டத்தில் ஏன் பங்கேற்கவில்லை எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் பிரவீன்குமாரை சரமாரியாக அடித்து உதைத்து கத்தியால் குத்தினர். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பிரவீன்குமாருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இச்சம்பவம் குறித்து சைதாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கும்பலாக சேர்ந்து தாக்கி கொடுங்காயம் ஏற்படுத்துதல், கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் 4 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரவீன்குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர், தன்னை தாக்கிய மாணவர்களை நேரில் பார்த்தால் அடையாளம் காட்டமுடியும் என்று கூறியுள்ளார். 4 மாணவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பஸ் தினம் கொண்டாடு வதற்கு ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனும், பஸ் தினம் கொண்டாடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். ஆனால் இவற்றையெல்லாம் மாணவர்கள் பொருட்படுத்தவில்லை. பஸ் தினம் தொடர்பாக கடந்த ஒரு வாரமாக மோதல் சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே இதற்கு போலீசார் உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.