ஸ்டான்லி மருத்துவமனை ஊழியர்கள் போராட்டம்: பிரச்சினை குறித்து விசாரிக்க குழு; அமைச்சர் தகவல்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சென்னை, பிப். 10- சட்டசபையில் இன்று டி.ஜெயக்குமார் (அ.தி.மு.க.) ஒரு சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். அப்போது சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அங்குள்ள சூப்பிரண்டுக்கும், டீனுக்கும் இடையே உள்ள பிரச்சினை காரணமாக மருத்துவமனை ஊழியர்கள் பாதிக்கப்படுவதாகவும் தற்போது அவர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்துவதாகவும் ஆனால் அரசு அதை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறினார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறியதாவது:- உறுப்பினர் ஜெயக்குமார் குறிப்பிட்டபடி ஸ்டான்லி மருத்துவமனை நிர்வாக ரீதியாக ஒரு சில பிரச்சினைகள் உள்ளன. இதற்காக அங்குள்ள ஊழியர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். தற்போது தமிழ்நாட்டில் ஒவ்வொரு மருத்துவ கல்லூரிக்கும், மருத்துவமனைக்கும், சூப்பிரண்டு, டீனும் தனித்தனியாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஸ்டான்லி மருத்துவ கல்லூரி டீன் தற்போது மருத்துவ கல்லூரி இயக்குனராக பதவி உயர்வு பெற்றுள்ளார். ஊழியர்களின் பிரச்சினை குறித்து விசாரிக்க குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரசு விழிப்பாகவே உள்ளது. மக்களுக்காகவே பாடுபடுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.