இலவச டி.வி., கலைஞர் காப்பீட்டு திட்டத்துக்கு கூடுதல் நிதி; சட்டசபையில் ரூ.11,772 கோடிக்கு துணை மதிப்பீடு தாக்கல்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சென்னை, பிப். 10- சட்டசபையில் இன்று நிதி அமைச்சர் அன்பழகன் 2010-2011-ம் ஆண்டுக்கான இறுதி துணை மதிப்பீடுகளை இன்று தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:- துணை மானிய கோரிக்கைகளை விளக்கி கூறும் விரிவான ஒரு அறிக்கை இந்த மன்றத்தில் வைக்கப்பட்டு உள்ளது. இந்த துணை மதிப்பீடுகள் மொத்தம் ரூ. 11,772 கோடி அளவிலான நிதியை ஒதுக்க வகை செய்கிறது. இதில் ரூ. 9,144 கோடி வருவாய் கணக்கிலும், ரூ. 2,628 கோடி மூலதனம் மற்றும் கடன் கணக்கிலும் அடங்கும். இலவச கலர் டி.வி. வழங்கும் திட்டத்துக்கு கூடுதலாக ரூ. 258.22 கோடி அரசுக்கு தேவைப்படுகிறது. இத்தொகை மானிய கோரிக்கை எண் 31 தகவல் தொழில் நுட்பவியல் துறை என்பதன் கீழ் சேர்க்கப்பட் டுள்ளது. கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுவதற்கு கூடுதலாக ரூ. 214.52 கோடி அரசுக்கு தேவைப்படுவதும் துணை மதிப்பீடுகளில் சேர்க்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின் வாரியம் அரசுக்கு செலுத்த வேண்டிய மின் வரி- அதன் மீதான வட்டித் தொகை ரூ. 1235.13 கோடி தமிழ்நாடு மின் வாரியத்துக்கு பங்கு மூல தனமாக அரசு மாற்றி உள்ளது. இதுவும் துணை மதிப்பீடுகளில் சேர்க்கப்பட்டுள்ளது. மாநில போக்குவரத்து கழகங்களுக்கு டீசல் மானியம்-ஊதிய ஒப்பந்தம் ஆகியவற்றுக்கு கூடுதலாக ரூ. 623.49 கோடி முன் பணமாக தேவைப்படுகிறது. இதுவும் துணை மதிப்பீடுகளில் சேர்க்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.