சொத்து குவிப்பு ஊழல்: நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் உறவினர்களிடம் சி.ஐ.டி. போலீஸ் விசாரணை

| [ திரும்பி செல்ல ]

திருவனந்தபுரம், மார்ச்.5- சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் குடும்பத்தினர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்து இருப்பதாக புகார் கூறப்பட்டது. அவர்கள் தங்களது சொந்த மாநிலமான கேரளா மற்றும் தமிழ்நாட்டில் அதிக சொத்துக்களை வாங்கி குவித்து இருந்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த நிலையில் கேரள சி.ஐ.டி. போலீசாரும் இது தொடர்பாக விசாரணை தொடங்கி உள்ளனர். இது தொடர்பாக வக்கீல் வினு என்பவர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேரள அரசிடம் விளக்கம் கேட்டு இருந்தார். அதற்கு அரசு அளித்த பதிலில் கே.ஜி.பாலகிருஷ் ணன் குடும்பத்தினர் எவ்வளவு சொத்து வாங்கியுள்ளனர் என்பது குறித்து சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். கே.ஜி.பாலகிருஷ்ணன் மருமகன்கள் ஸ்ரீனிஜான், பென்னி ஆகியோர் வாங்கியுள்ள சொத்துக்கள் குறித்து விசாரிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. ஸ்ரீனிஜான், பென்னி ஆகியோர் கே.ஜி.பாலகிருஷ்ணன் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக இருந்த காலக்கட்டத்தில் பல்வேறு சொத்துக்களை வாங்கி இருந்தனர். ஸ்ரீனிஜான் தனது பெயரிலும் மனைவி பெயரிலும் ரூ.40 லட்சம் சொத்துக்கள் வாங்கி இருந்தார். பென்னி பல கோடி ரூபாய் சொத்துக்களை வாங்கிகுவித்து இருந்தார். அனைத்து விவரங்களையும் போலீசார் திரட்டி வருகின்றனர்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.