சட்டசபை தேர்தல்: 4 பிரிவுகளாக தயாராகும் ரவுடிகள் பட்டியல்- கைது செய்ய நடவடிக்கை

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சென்னை, மார்ச். 5- சென்னையில் உள்ள 16 சட்டசபை தொகுதிகளிலும் அமைதியான முறையில் தேர்தலை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. தேர்தலின்போது வன்முறை சம்பவங்கள் நிகழாமல் இருக்க ரவுடிகளை கண்காணித்து கைது செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னையில் மொத்தம் 2 ஆயிரம் ரவுடிகள் இருப்ப தாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். பெரிய தாதாக்களாக வலம் வந்தவர்கள், இரட்டைக் கொலை வழக்குகளில் தொடர்புடையவர்கள் ?ஏ பிளஸ்? ரவுடிகள் என்று போலீஸ் வட்டாரத்தில் அழைக்கப்படுகிறார்கள். இது போன்ற ரவுடிகள் 40 பேர் இருப்பதாக கூறப்படுகிறது. ஏ, பி, சி என 3 பிரிவு களாகவும் ரவுடிகளும் பிரிக் கப்பட்டுள்ளனர். ஒரு கொலை வழக்கில் மட்டும் தொடர்புடையவர்கள் ?ஏ? பிரிவிலும் கொலை முயற்சி வழக்குகளில் சம்பந்தப்பட்ட வர்கள் ?பி? பிரிவிலும் இடம் பெற்றுள்ளனர். அடிதடி வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகள் ?சி? பிரிவில் சேர்க் கப்பட்டுள்ளனர். ரவுடிகள் பட்டியலில் இடம் பெற்றிருப்பவர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்களுக் கும் உத்தரவு பிறப்பிக்கப்பட் டுள்ளது. வேண்டியவர், வேண்டாதவர் என எந்தவித பாகுபாடுமின்றி ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். தேர்தல் நேரங்களில் இவர்களை கைது செய்து சிறையில் அடைக்கவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் ரவுடிகள் பட்டியல் தயாராகி வருகிறது. மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டுகள் இதற்கான பணிகளை முடக்கி விட்டுள்ளனர். கடந்த தேர்தலில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்ற இடங்களும் கணக்கெடுக்கப் பட்டுள்ளது. இது தொடர் பாக யார்- யார் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் பின்னணியில் இருந்து செயல்பட்டவர்கள் யார் என்பது பற்றிய விவரங்களும் சேகரிக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற பதட்டமான தொகுதிகள் மற்றும் வாக்குச் சாவடிகளில் துணை ராணுவ படையினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.